உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 61 பாமர், மாரிட்டிஸ் டில்லர்; ஸ்வீடனிலிருந்து வந்த விக் டர் ஸிஸ்ட்ரன் முதலானவர்கள் முக்கியமானவர்கள். மிகவேகமாக சினிமாக்கலை அமெரிக்காவில் முன் னேறிக் கொண்டிருக்கையில், ஐரோப்பாவிலும் சில மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தன. மகாயுத்தம் முடிந்த பிறகுதான் ஒவ்வொரு தேசமும் சினிமா பக் கம் திரும்பின. பிரான்சு நாட்டில் சினிமாவைத் திரும்ப உயிர்ப்பிக்கப் பல திட்டங்கள் போடப்பட்டன. ஜெர்மனியில் பல தனிப்பட்ட முதலாளிகள் படம் பிடிக்க ஆரம்பித்தனர்.மற்றும் கிறிய நாடுகளும் இங்கிலாந்து, ஸ்வீடன், கார்வே, செக்கோ முதலிய நாடுகளும் படம் பிடிக்க ஆரம்பித்தன. ஆனால் யுத்தத் திற்கு பிறகு ஜர்மனி ஒன்றினால்தான் அமெரிக்கா வின் படத் திறமைக்குப் போட்டியிட முடிந்தது. 1919-ம் வருடம் ராபர்ட்வைன் என்பவர் "தி காபினட் ஆப் டாக்டர் காலிகரி" என்ற படத்தை வடுத்தார். மிக உன்னதமாக டைரக்ட் செய்யப் பட்ட படங்களில் இது வொன்று. ஆனால் எவ்வளவு நல்ல படங்கள் எடுத்தாலும், அமெரிக்கா எடுக்கு மளவுக்கு அதிகமான படங்கள் பிடித்து, அதனுடன் போட்டி போட ஜர்மனி யால் இயல வில்லை. உலக மார்கெட் ஹாலிவுட்டின் கையிலேயே இருந்தது. இந்த நிலைமையில் ஹாலிவுட் டுடன் போட்டி போடக் கூடியது ரஷ்யா ஒன்று தான். ரஷ்டாவில் சினிமா விரிவான அளவில் வளர்ந் தது. புரட்சிக்குப் பிறகு 1919-ல் ரஷ்ய சினிமா தேசிய மயமாக்கப்பட்டது அதன் பிறகு மக்களுக்குப் பொழுது போக்காக மாத்திர மல்லாமல் அறியை புகட்டக் கூடியதும், தேசத்தின் பல் பாகங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/61&oldid=1732298" இலிருந்து மீள்விக்கப்பட்டது