62 களஞ்சியம் உள்ளவரின் எண்ணங்களை ஒன்று சேர்க்கும் முறை யிலும் படங்கள் எடுக்கப் பட்டன. தேசிய மயமாகப் பட்ட பிறகு, சோவியத் ருஷ்யாவின் சினிமாவை உச்ச நிலைமைக்குக் கொண்டு வந்தார்கள். இந்த பெருமை ஸன்டின், புருங்கின் என்ற இருவர்களையே சாரும். இவர்களிருவரும் கம்யூனிஸ்டுகள் சினிமாவை சரியான முறையில் தயாரித்து மக்களுக்கு ஒப்பற்ற படங்களை கொடுத்தார்கள். ஈஸன்ஸ்டின் தயாரித்த 'அக்டோபர் (பாரைக் குலுக்கிய பத்து நாட்கள்) என்ற படமும் புருங்கின் தயாரித்த "பீட்டர்ஸ் பர்க்கின் முடிவு" என்ற படமும் இன்றுவரை சினிமா உலகில் முதல்தர மான படங்களாக இடம் பெருபவை. ஆரம்ப காலத்தில் ரஷ்யாவிற்கு வெளி மார்கெட்களுக்குப் படம் கொடுக்க முடியவில்லை. வேகமாக வளர்ந்து வந்த ஜிெர்மனிக்கும் ஹிட்லர் அரசாட்சி ஏற்பட்ட பிறகு தடையுண்டாகி விட்டது, நாஜி பிரச்சார படங்களை எடுக்க ஆரம்பித் தார்கள். ஜெர்மன் டைரக்டர்கள். போட்டி போடுவா ரில்லாமல் அமெரிக்கர் ஏக சக்ராதிபதியாகக் காலம் தள்ளி வந்தது. இதற்கிடையில் 1928-ல் பேசாத சினிமா தயாரிப் பதி லிருந்து பேசும் கினிமா தயாரிப்பதைக் கண்டு பிடித்தனர். அதற்குப் பிறகு சினிமாவுக்கென்று அழகான வசன மெழுதுவர்களும் பாட்டுப்பாடுபவர் களும் அதிகமாயினர். கிட்ட தட்ட 1930 ம் வருடம் உலகத்தின் எல்லா நாடுகளிலும் மும்முரமாகப் படங் கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவை எட்டிப்பிடிக்க ஒவ்வொரு தேசமும் முயன்று கொண் டிருந்தது.இந்த நிலையில் உலக யுத்தம் வந்தது.
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/62
Appearance