நெடுஞ்செழியன் 63 (1939-46) மறுபடியும் ஐரோப்பிய தேசங்கள் யுத்தத் தில் ஆழ்ந்தன. சென்ற யுத்தத்தைப்போல் இந்தத் தடவையும், அமெரிக்கா சௌகரியமான இடத்தில் வைக்கப்பட்டது. ஆனால் அதனால் அமெரிக்காவிற்கு அதிகமான பலன் எதுவும் ஏற்பட்டு விட்டது என்று கூறமுடியாது. இன்று யுத்தம் முடிந்தவுடன் அமெ ரிக்காவுடன் போட்டி போடுவது இ ண்டு தேசங்கள் தாம். இங்கிலாந்தும் சோவியத் ருஷ்யாவும். ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கொள்கைக்குப் பயந்து முதலாளி தத்துவ நாடுகள் யாவும் சோவியத் பிலிம்கள்மீது தடைபோட் டுள்ளனர். பிரிட்டனில் பட முதலாளிகள் ஆர்தர் ரேங்க் என்பவர் தலைமையில் உலக மார்க்கெட்டைப் பிடிக்கு மளவுக்குப் படங்கள் தயாரிக்கத் திட்டம் போட்டு வேலை செய்கின்றனர். யார் வெற்றியடையப் போகிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம். சென்ற ஐம்பது ஆண்டுகளாக சினிமா அடைந் திருக்கும் வளர்ச்சியின் ஒரு பகுதி நாம் மேலே குறிப் பிட்டுள்ளது. இன்றைய தினம் ஓய்வு நேரங்களில் உல்லாசத்தைத் தரும் அமைப்புகளில் சினிமாவும் ஒன்று. சினிமா ஒன்றினால்தான் ஒரே சமயத்தில் சில பேருக்கு ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்ல முடி கிறது. நாம் பல நாவலாசிரியர்கள் எழுதிய கதைகளைப் படித்ததில்லை. ஆனால் அவர்கள் எழுதிய சினிமாவைப் பார்த்தால் நமக்கு இரண்டு லாபம் உண்டு. பொழுது போக்குடன் நாவலையும் அறிந்துகொள்கிறோம். சினிமா, அறிவை அபிவிருத்தி செய்யும் சாதனங்களில் முக்கிய மானது.
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/63
Appearance