64 களஞ்சியம் சென்ற ஐம்பது ஆண்டுகளில் சினிமா அடைந் துள்ள வளர்ச்சியின் ஒரு பகுதிதான் நாம் மேலே குறிப் பிட்டுள்ளது. இன்று சினிமாவுக்கு சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் இடத்தை எடுத்துக்கூற தேவை பயில்லை.உலகத்தின் பல்வேறு நாட்டு மக்களினிடையில் பொதுத் தொடர்ச்சி யுண்டாக்கும் முக்கியமான சாத னங்களில் சினிமா ஒன்று. உலுத்துப்போன சமுதா யத்தின் சோம்பேறித்தனத்தை நீக்கி உணர்ச்சி, நேர்மை, நீதி,ஒழுக்கம் எதையும் பரப்ப சினிமா ஒப்பற்ற பிரச்சார இயந்திரம். சினிமாவைப்பற்றி கூறும்போது லெனின், "களைகளில் மிக முக்கிய மானது" என்றார். அதை தொடர்ந்து சோவியத் யூனியன் கையில், "சினிமா ஒரு மகத்தான சக்தி" என்றார் ஸ்டாலின். சினிமா கலைஞனின் ஒப்பற்ற சிருஷ்டி. கவிவாணர் களின் இன்ப விளைவு. எழுத்தாளனின் கற்பனை உலகம். அது வளர வளர மனித சமுதாயம் முன்னே றும். வாழ்வு இன்பமுறும். 67 ஸ்ரீகள் அச்சகம், செண்னை !
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/64
Appearance