நெடுஞ்செழியன் விற்குப் புலப்பட்டது. அந்த மைந்தனின் திறமையைக் கண்டு ஏமாற்றமடைந்த தந்தை மற்றொரு மகன் அறைக்குச் சென்றார். · அவன் வழியில் நின்று தந்தையை வரவேற்றுத் தன் அறைக்குள் ழைத்துச் சென்றான். அறை முழு வதும் பரவிநிற்கக்கூடிய பொருள் ஒளி என்றுக் கருதி, மெழுகுவர்த்தி யொன்றை அறையின் நடுவே ஏற்றி வைத்திருந்தான். காண்பதற்குரிய கண்கவர் பொருள் களை வைக்கவேண்டிய இடங்களில் வைத்து நறுமணங் கமழும் பூக்களைப் பரந்துபடத் தூவியிருந்தான். ஒரு பால் புத்தகங்களை அடுக்கியிருந்தான். அவனது திற மையைக் கண்டு தந்தையார் மகிழ்ந்தார். தந்தை கொடுத்த பணத்திற்கு ஒரு மகன் தன் அறையை நிரப்பிக் காட்டிய பொருள் வைக்கோல்! மற்றொரு மகன் நிரப்பிக் காட்டிய பொருள் ஒளி ! இத்தகைய கருத்துள்ள நிகழ்ச்சி, ஈசாப் கதைகளி லொன்றில் தீட்டிக் காட்டப்பட்டுள்ளது. தந்தையின் கட்டளைப்படி அறையை நிரப்பும் சோதனையில் ஈடுபட்ட இருவருக்கும் இருவேறு வழி கள் தென்பட்டன. ஆகவே அவ்விருவரும் அவ்வழி களில் இழுத்துச் செல்லப்பட்டனர். - அதுபோல அமைச்சர் அவனாசிலிங்கனார்முன் சோதனை ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அவரிடம் தமிழகம் ஒரு பெரும் பொறுப்பை - அவசியமான பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. அதுதான் தமிழ்க் 'களஞ்சியம்' (Encyclopaedia) உருவாக்கும் பெரும்பணியாகும். அவர் அப்பணியை ஏற்றுக்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/7
Appearance