8 களஞ்சியம் கொண்டிருக்கிறார். அது மகிழ்ச்சிக்குரியது - பாராட் டத்தக்கது! களஞ்சியத்தை நிரப்பும் பெரும் பணிக்கு உதவியாக இருக்கும் பொருட்டு நன்கொடை வழங்கி யுள்ளனர். அரசாங்கமும் ஆன உதவி புரிய இசைந் துள்ளது. இந்த உதவிகள் மட்டும் போதா என்றா லும் இவைகளைக் கொண்டு வெளியாகும் களஞ்சியத் தைத் தமிழகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறது. தங்களுக்குக் கொடுத்த அறைகளை நிரப்பிக்காட்ட மைந்தர்களுக்கு இரு வழிகள் தென்பட்டதுபோல களஞ்சியத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சருக்கு இரண்டு வழிகள் குறுக்கிடக்கூடும். அவர் எதேனும் ஒரு வழியில் சென்று தீரவேண்டும். அவர் அறியாமலேயே அவர் இழுத்துச் செல்லப்பட வுங் கூடும். அவர் எவ்வழியில் செல்லுகிறார் என்ப தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ! களஞ் சியம் நமக் கு க் காட்டப்போவது வைக்கோலா? ஒளியா? சக்கையா? சாறா? என்பது போகப்போகத் தான் தெரியவரும். ஆனால் நாம் வேண்டி நிற்பது ஒளி1 இருளல்ல ! - சாறு ! சக்கையல்ல! நமது ஆவல் முயற்சி வெற்றிபெற வேண்டுமென்பது. புதியன காணவேண்டும், அறியவேண்டும் என்ற அவா பெருகியுள்ள காலம் இது. அந்த ஆவல்தான் இருள் நிறைந்த காட்டில் திரிந்து கொண்டிருந்த மனி தனை ஒளியுமிழ்ந்து விளங்கும் நாகரிக நகரங்களில் நட மாடத் தூண்டியது. மேலும் மேலும் அறியவேண்டும் என்ற விருப்ப மேலீட்டால் உந்தப்பட்ட மனிதன், ஒவ்வொரு பொருளின் நுட்பத்தையும், அதன் இயற்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/8
Appearance