உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் நெடுஞ்செழியன் பண்பையும், இயக்கத்தையும், மாறுகலையும் கண்டறிந்து அவற்றை வாழ்க்கைக்குப் பயன்படுத்த துடித்துக்கொண்டிருக்கிறான். அவாவிய கருத்து நிறைவேறும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை. அந்த மகிழ்ச்சி உள்ளத்திற்கு இன்பம் பயக்கிறது. இன்பம் நுகர வேண்டி, மகிழ்ச்சி தரத் தக்கப் பொருள்களின் மேலெல்லாம் உள்ளம் தாவு கிறது. அந்த உள்ளர் வெண்ணிலாவைக் காணவிழை கிறது; நிலத்திரைக்கடலில் நீந்துகிறது; தென்றலில் உலாவுகிறது; வெண்மணற் பரப்பில் விளையாடுகிறது; பச்சைப் பைங்கூழைக் கட்டி அணைக்கிறது; அருவி யில் ஆடுகிறது; எழில் மலைமேல் ஏறுகிறது; மாட மாளிகை கூடகோபுரங்கள் மீது தொத்துகிறது; இசை யில் மயங்குகிறது; ஓடைக் குளிர் மலரோடு உராய் கிறது! முல்லையின் நறுமணத்தை முகருகிறது; இன் னும் மகிழ்ச்சியூட்டி இன்பம் பயப்பன எவை எவையோ அவையெல்லாவற்றையும் அறிய, காண, கேட்க அவா வுற்று நிற்கின்றது. இந்த ஆவலை நிறைவேற்றித் தரும் இலக்கியம் 'களஞ்சியம்' (Encyclopaedia) ஒன்றேயாகும். நெற்பொதிகள் குவிக்கப்படும் இடம் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது போல, பல்வேறு கருத்துக் களை ஒன்றாகத் திரட்டித் தருவது களஞ்சியமாகும். 'களஞ்சியம்' (Enuvel paeria) என்பதற்குக் கிரேக்க நாட்டு மக்கள் கொண்டிருந்த பொதுவான பொருள் "கல்வியறிவின் முழுத்தோற்றம்' அல்லது அறிவியல்கள் (science ) கலைகள் (Art) ஆகியவற் றின் முழு அறிவு" என்பதாகும். 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/9&oldid=1732244" இலிருந்து மீள்விக்கப்பட்டது