பக்கம்:களத்துமேடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

களத்து மேடு

“ஆமாங்க, எங்கண்ணு கலங்கிக்கிட்டுத்தான் இருக்கு. வேறே என்னாலே என்னா செய்யு ஏலும்?... உங்க காரியங்க தான் என்னையும் மிஞ்சிப் போயிட்டிருக்குதுங்களே?...... இம்பிட்டு காலத்துக்கு அப்பறமும் கள்ளத்தனமா ஒரு பொண்ணோடே நேசம் கொண்டுக்கிட்டு இருந்து வார அந்தப் பாவத்துக் கோசரம்தானே, இப்ப சிலட்டூர் மச்சான்காரர் என்னைக்கட்டிக்கிறதுக்கே கிழக்கேயும் மேற்கேயும் பார்த்துக்கிட்டு இருக்காக?..” என்றாள் தைலம்மை. அவள் பேச்சில் தான் எந்தனை கண்டிப்பு! .....

உயிர்ப்பொறியில் அடிபட்ட மாதிரியாகத் துடிதுடித்தார் சேர்வை. அவர் கண்கள் சிவந்துவந்தன. அந்தச் சிவப்பில் கசிவும் தட்டுப்படத் தொடங்கியது. ‘பெத்த அப்பன்னு கூடப் பார்க்காமல் எம்மாம் துணிச்சலோடே கேட்டிடுச்சி மகள்!’ என்று ஒருபக்கம் ஆத்திரமும், ‘நான் செஞ்ச தப்பு இப்பத்தான் அதுக்குப் புரிஞ்சிருக்கு; உடனேயே கேட்டுப் புடிச்சு தைலி, இதிவே நான் நெஞ்சு கொதிக்கிறதுக்கு ஏது முகாந்திரம்?’ என்று மறுபுறம் ஆற்றாமையும் எழுந்தன. மீண்டும் கனைத்துக் கொண்டார்; மகளின் எதிர்வசத்தில் உட்கார்ந்தார்.

“ஆத்தா, பெத்த அப்பன்கிட்டவே நீ விசாரனை நடத்திற அளவுக்குக் காரியம் எக்குத் தப்பாப் போயிருச்சு என்கிறது மெய்தான். சமய சந்தர்ப்பங்க எப்படி எப்படியோ என்னைக் காடுமாத்திப்பிடுச்சு. இந்த ஒரு தாக்கலை எப்படி ஆத்தா நான் உங்கிட்டே பெத்த பொண்ணு உங்கிட்டே மூச்சுக் காட்டியிருக்க முடியும்?.... நடந்தது நடந்திருச்சி... இதைத் தவிர, வேறே எப்படி உங்கிட்டே நான் சமாதானம் சொல்லிறதின்னு எனக்கு மட்டுப்படக் காணோம். நடந்ததைக் கனவாட்டம் நினைச்சுக்க, தைலி, ஆனா இந்த ஒரு சர்வசாதாரணமான நடப்பைப்பெரிசுபடுத்தி, இதுக் கோசரம் முடிஞ்ச ஒரு சம்பந்தம் சாடிக்கைப் பேச்சைத்தண்டு முறிக்கப் பார்க்கிற ஒரு சங்கதிதான் எனக்குச் சிலட்டுர் மாப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/107&oldid=1386239" இலிருந்து மீள்விக்கப்பட்டது