பக்கம்:களத்துமேடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

களத்து மேடு


நான் என்னத்தைச் சொல்ல இருக்குது?... அப்படின்னா "நீங்க உங்க கூத்தைத் தொடர்ச்சியா நடத்திக்கிட்டுத்தான் இருக்கப்போறீங்களா? அப்படிப்பட்ட முடிவோட நீங்க இருக்கையிலே, இந்தச் சிலட்டுருச் சம்பந்தம் தெகையிறத்துக்கு எப்படிங்க வாய்க்க முடியும்?.... உங்களுக்கு உங்களைப்பத்தித்தான் அக்கறை? என்னைப்பத்தி உங்களுக்கு லவலேசமும் கவலை இல்லேயிங்கிறதுந்தான் வெட்ட வெளிச்சமாயிடுச்சே... சிலட்டூர்ச் சம்பந்தம் முடிஞ்சிட்டதாக நீங்க தலைப்பிலே எங்கிட்டே சேதியை வெளிக்காட்டினதுமே, நான் உங்கிட்டே 'இந்த முடிவிலே பின்னாடி எந்த ஒரு மாறுதலும் செஞ்சிட மாட்டீங்களேன்னு கேட்டேன். நீங்க பேசி வந்திருக்கிற அந்தச் சிலட்டூர் மாப்புள்ளைக்காரகளைப் பத்தி ஒங்க மனசு நாளைப்பின்னாக்கி எப்பவுமே தடம் புரளாதுங்களே?' அப்படின்னும் கேட்டேன். "ஊஹும், சத்தியம் இது!' அப்படின்னு நீங்கவாக்குக் குடுத்தீங்களே, அப்பாரே?" என்று கேட்டாள் அவள்.

"அதெல்லாம் நெசம் தான் பொண்ணே! அதுக்காக, எம்புட்டு கௌரவத்தை விட்டுக் குடுக்க ஒப்புமா எம்மனசு?- அதுவும் அசல் நாட்டுப் புள்ளேகிட்டே நான் படிஞ்சு பேச கட்டுமானப்படுமா என் நெஞ்சு?.... "அவர் பேச்சில் ஓர் அழுத்தம் இருந்தது. கறுவல் எடுப்பாக மிளிர்ந்த மீசை துடித்தது.

"அப்படின்னா, உங்க நட்பு உங்களுக்கே நாயமாப்படுதா?" என்று கோபாவேசத்தோடு கேட்டாள் அவள்.

"ஆத்தர், பெத்த மகள் உன் முன்னாடி நான் குற்றவாளியாய் நிக்கிறேனே, அந்த உண்மை நடப்பைப்புரிஞ்சுக்கிடாமல், வாய்க்கு வந்தபடி என்னைக் கிண்டிக்கிளறிட்டே இருக்கீயே, ஆத்தா? புட்டுவச்சுச் சொல்லிப்போடுறேன். நான் சிநேகிதம் வச்சிருந்த செல்லாயி செத்துச் சிவலோகம் பறிஞ்சிட்டாள். அந்த ஏக்கத்திலேதான் எனக்கு நெஞ்ச-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/109&oldid=1386050" இலிருந்து மீள்விக்கப்பட்டது