பக்கம்:களத்துமேடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

105


தைலம்மை தன்னைச் சரிசெய்து கொண்டு நடைவழியாக வாசலை அடைந்தாள். இரவு பூராவும் பற்பல குழப்பங்களோடு தூக்கம்பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்த காரணத்தால், அவளுக்கு அசதி மிஞ்சியிருந்தது. விடிசாமத்தில் தன்னையும் அறியாமல் சிறுபொழுது அசந்து உறங்கி விட்டாள். அதனால்தான் அவள் துயில் கலைந்து எழ சற்றே நேரம் ஆகிவிட்டது. இல்லையென்றால், வாணியச் சுப்பையா வீட்டுக் கோழி கூப்பிட அவள் கச்சிதமாக எழுந்து விடுவாளே!

வாசலுக்கு வந்த அவள் உள்ளே தன் தந்தையைக் காணாததைப் போலவே வெளியேயும் காணமுடியவில்லை. 'என்ன விதி இது?' என்பதாக ஒரு பொட்டுப் பொழுது திசை கெட்டுநின்றாள். வெளிப்பக்கத் தாழ்வாரத்தில் எட்டிப் பார்த்தாள். ஏர்க்கலப்பையைக் காணவில்லை. திண்ணை மாடக் குழியை நோக்கினாள். மாமூல்மாறாது, காணப்பட்டு சேர்வையின் இருப்பிடத்தைச்சுட்டும் நெருப்புப் பெட்டி, சுருட் டையும் காணவில்லை. உழவு மழையின் அடிச்சுவட்டைக் கண்டாள். ஆமா, அப்பாரு வெள்ளாமை வெளைச்சலுக்காக வயல்காட்டை நாடித்தான் ஏகியிருப்பாங்க. நாளைக்கு முக்காலும் நடவு தொடங்கியிருவாகண்ணு தான் பேசிக்கிணாங்களே!... என்று ஆறுதல் அடைந்தாள். மறுகணம் அவள் வெளித்திண்ணையை நினைவுபதித்துப் பார்த்தபோது அங்கு சிங்காரமும் காணப்படாததை அறிந்தாள். விடிகாலையில் மழை அடித்ததும், எழுந்துபோய் சிங்காரத்தை உசுப்பிவிட்டு உள்ளே நடையில் படுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டுமென்றுதான் பதறினாள். ஆனால், ஏனோ அவள் அவ்வாறு செய்யவில்லை; செய்யத்தவறிய குற்றத்துக்காகக் கழிவிரக்கம் கொள்ள மட்டுமே அவள் தயாரானாள். வாசலை விட்டு, நிலைப்படியைத் தாண்டிக் கூடத்தில் வந்து நின்றாள். நானும் எங்க அயித்தை மவனும் பொடிசா இருக்குந்தொட்டியும் இங்கிட்டுத் தானே ஒண்ணடிமண்ணடியாப்படுத்துக் கெடப்போம்?.... அப்பாலே தான் அவுக செலட் டூருக்குப் பறிஞ்சாங்க; மறுகாத்தான் அக்கரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/112&oldid=1386056" இலிருந்து மீள்விக்கப்பட்டது