பக்கம்:களத்துமேடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

களத்து மேடு


தண்ணியைக் குடிச்சுக் கெடந் தாங்க!..... பெருமூச்சு மண்ணுளிப் பாம்பாக 'புஸ்' என்று வெளியேறிற்று.

அதற்குள் இன்னொரு கவலைக்கு ஆளானாள், ஆளான தைலம்மை. 'ஆமா; வூட்டைவுட்டுப் புறப்பட்டடியும் வளமையாய் என்னை ஆத்தான்னு அழைச்சுச் செப்பிட்டுத் தான் கிளம்புவாங்க. போற இடம் வார இடத்தைச் சொல்லிப்பிடுறது அவுக்கிட்டே வழக்கம். இல்லே! இண்ணககி ஏன் இப்படி அப்பன்காரக என்னைப்பத்தி அக்கறைப்படாமப் போயிட்டாக? நானு ராத்திரி அவுகளை விசாரணை செஞ்சதினாலே எம்பேரிலே கெட்ட கோபம் கொண்டிருப்பாக போலே!... உள்ளதைச் சொன்னா உடம்பு எரிச்சல்தான் வரும்!...' என்று தன்னுள் நினைத்துக் கொண்டாள். 'அப்பனை எதிர்த்துக் கேட்கிறதுக்கு எப்படி எனக்கு வல்லமை வந்திச்சு?' என்று அதிசயப்பட்ட அவள் அதே நேரத்தில், ஆனானப்பட்ட அப்பன்காரர் எம் பேச்சைக் கேட்டு எப்படிக் காட்டப்படாமப் பொறுமையா இருந்தாரு?' என்று வியப்படைந்தாள்.

உன்ளே தடந்தாள் தைலம்மை.

மாந்தளை மரப்பெட்டகம் திறந்தது திறந்தபடியே இருந்தது.

செங்காளியப்பன் சேர்வையா இப்படி மறந்து பெட்டியைப் பூட்டாமல் போய்வீட்டிருக்கிறார்? இடுப்புப்பட்டுக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் சாவிக் கொத்தைக் கழற்றி வைத்து ஒரு நாள் கூட தைலி பார்த்ததில்லையே?

தைலி ஓர் ஆர்வத்துடிப்புடன் குனிந்தாள். சுங்கடியின் மாராப்புச் சேலை, நழுவியது. எடுத்துப் போட்டுக் கொண்டு அதன் முன்றானையின் ஒரு தலைப்பை இடுப்பில் செருகியும் கொண்டாள். கழுத்துச் சங்கிலி ஊசாலாடியது. அவள் பார்வை அழுந்தியது. 'பிராமிசரி நோட்டுக்கள்,' சில மேல் மட்டத்தில் காணப்பட்டன. இடது முடுக்கில் ஒரு முடிச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/113&oldid=1386058" இலிருந்து மீள்விக்கப்பட்டது