பக்கம்:களத்துமேடு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

களத்து மேடு

இல்லாங்காட்டி "உன்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன், சரவணா!..... நீ உன் இஷ்டப்படி எதுவேணுமானாலும் செஞ்சுக்கிடு. அப்பாலே, முடிவைப்பார்த்துக்கிடவும் தயாராயிரு!" என்று அவுக சவால் விட்டிருப்பாங்களா? ஐயோ! என்ன நடக்கப்போவுதோ, ஒண்ணுமே மட்டுப்படலையே?... அதற்குமேல் அவள் சித்தம் இயங்க மறுத்து விட்டதுபோல ஓர் உணர்வு எழுந்து பரவியது.

மனம் இயங்க மறுத்தாலும், மனச்சாட்சி இயங்க மறுத்து விடமுடியாதல்லவா? அது இயங்கியது. 'ஒனக்கு மொதல் உரிமை கொண்டவன் உண்னோட அயித்தைமவன் தானே?.... நீ கொண்டாடிட்டு இருக்கிற இந்தச்சரவணன் நேத்து. முளைச்ச மச்சான்தானே?... இந்த மச்சானைக் காட்டிலும், அந்த முறை மச்சான்தானே ஒனக்கு முதலிலே முளைச்சவன்?... அவன் பொறந்து, நீயும் பொறந்தடியும், ஒனக்கு அவன், அவனுக்கு நீயின்னுதானே ஒங்க ரெண்டு தரப்பு அப்பன் ஆத்தாளும் ஒப்பந்தம் செஞ்சுக்கிட்டுக் கையடிச்சுக்கிட்டாங்க!....' என்று வினாச் சொடுக்கியது அவளது அந்தரங்கம்.

அவளுக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது; செய்வகை புரியாமல் தத்தளித்தாள். தாங்க முடியாத ஒரு முடிவைச் சொல்லிவிட 'விதி' என்னும் மாயப்பெருஞ் சக்தி ஒன்று எங்கோ தயாராகக்காத்துக் கொண்டிருப்பதுபோல அவளது உள்மனம் குத்திக்காட்டியது. அவளுடைய மேனி நடுங்கியது. கண்கள் குளமாயின, "ஆத்தா!" என்று உள்ளோலம் பரப்பினாள் தைலம்மை.

பெற்ற முத்தாயியும், பெறாத காட்டேறியும் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்?

அவள் தவித்தாள். கையிலிருந்த எரு கனக்கத் தொடங்கவே, அவள் சுயப்பிரக்ஞை எய்தினாள். அரித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/117&oldid=1386377" இலிருந்து மீள்விக்கப்பட்டது