பக்கம்:களத்துமேடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

களத்து மேடு


யுடன் சொன்னாள் அவள். உள்வட்டத்தில் சுழன்றடித்த வேதனைக் குமைச்சலை இம்மியும் வெளிக் காட்டவில்லை அவள்.

“அப்பன்னா ஒன் முடிவு என்ன தங்கச்சியோ?” என்றாள் ஏகாலி வீட்டுக் கிழவி.

“எனக்காகச் சவால் விட்டிருக்கிற அந்த ஆம்பளைங்களோட முடிவு என்ன ஆகுதின்னு வேடிக்கை பார்க்கிறது தான் எம்முடிவு, ஆயா!” என்றாள் தைலம்மை.

“ரொம்ப ரொம்ப அதிசயமான பொண்ணா இருக்கியே நீ?” என்றாள் சொக்கி.

“நல்ல செய்கை மூலமாய் பொண்னு அதிசயமாத்தான் இருக்கவேணும். சொக்கி, ஒனக்கு இதோட உள்ளர்த்தம் தட்டுப்படாது!” என்று 'பொடி' தூவிப்பேசினாள் தைலம்மை. எக்காளம் நிறைந்த தத்துவம் ஆயிற்றே அது!

“இருக்கிற நேசரைப்பார்த்தா, அவங்க ரெண்டு பேருக்குள்ளவும் வெத்துப்பழி-குத்துப்பழி கூட நடக்குமோ, என்னமோ?” என்றாள் அலஞ்சிரான்காட்டு பெத்தாச்சிக்கு வாழ்க்கைப்பட்ட பேச்சி.

“அப்படி நடந்தா, அது அவுக அவுக விதியைப் பொறுத்தது. வார விதி ராத்தங்கவா போகுது?”... என்று தாழ் குரலில் தீர்ப்புப் படித்தாள் தைலம்மை.

“இந்த மாதிரி ஒரு அதிசயம் நம்ம பதினாறு வட்டத்து நாட்டிலே நடந்ததே கிடையாதின்னு பேசிக்கிறாங்கடி, தைலி!”

என்றாள் பூவாயி,

“ஆமா, இதிலே ஒன் முடிவுதான் என்னடி, தைலி?” என்று ஆர்வம் பொங்கக் கேட்டாள் சொக்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/131&oldid=1386073" இலிருந்து மீள்விக்கப்பட்டது