பக்கம்:களத்துமேடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

133


“ஊம்!”

“நானே ஒன்னைக் கொண்டுக்கிடுறதாய் நான் சம்பிராயம் கட்டியிருக்கேன்...! சேக்காளி சரவணனோ, தானே ஒன்னைக் கட்டிக்கிறதாய் சபதம் வச்சிருக்கான்!”

“கேட்ட தாக்கல் தானுங்க இதுக!”

“ஆமா ஆமா!”

“இதிலே ஒங்க முடிவு என்னாங்க?”

“வாழ்ந்தா ஒன்னோடே வாழுறது;. இல்லாங்காட்டி எனக்கு இந்த லோகமே தேவை இல்லை என்கிறதுதான் எம் முடிவு!” என்று தீர்மானத்தின் கம்பீரம் குலுங்கத் தெரியப்படுத்திச் சிரித்தான் சிங்காரம். அவன் அவளை ஏறிட்டு நோக்கி ஊடுருவிப் பார்வையிட்டான்.

“ஒங்க மனசு புரியுதுங்க!...” திகைப்புடன் பேசினாள் தைலி.

“இனிமே ஒம்மனசுதான் புரிய வேனும்!...” என்று தடுமாறிய வண்ணம் சொன்னான் சிங்காரம்.

“ஆத்தா மூத்தவ எனக்கு என்ன முடிவு எழுதி வச்சிருக்காளோ? ”என்று உருக்கமாக மொழிந்தாள் வாலைக்குமரி.

“ஒம் முடிவைத்தான் ஆத்தா காட்டேறியும் எழுதிக் காட்டப் போறா!”

“அயித்தை பெத்த நவரத்தினத்துக்கு பேசவா தெரியாது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/140&oldid=1386130" இலிருந்து மீள்விக்கப்பட்டது