பக்கம்:களத்துமேடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

களத்து மேடு


தீர்ந்த புன்னகையுடன் காணப்பட்டான் சிங்காரம்.

மெளனம் கோலோச்சியது

“அம்மான் மவளே! நான் கிளம்பட்டுமா?”


“சரி. ஆனா, சாப்பாட்டுக்கு வந்துப்புடனுமுங்க!”... என்று வேண்டுதல் விடுத்தாள் தைலம்மை.

“ஒம் பேச்சைத் தட்டமுடியுமா?” என்று அன்பின் பரவசத்துடன் இணக்கம் சொன்னான் சிங்காரம். எழும்பினான்.

“இப்ப எங்காலே போறீங்க?”

“எங்க ஒண்ணுவிட்ட சின்னாத்தா ஆ ட் ைட வாடகைக்குக் கேட்டிருந்தேன். துரவச்சி வாங்கியாரப் போகிறனாக்கும்!...”

“அப்படீங்களா? செய்யுங்க!”

தைலம்மை பேசிமுடிக்கவில்லை.

அப்போது அங்கே செங்காளியப்பன் சேர்வை வந்து நின்றார், 'ஆத்தா' என்று விளித்த வண்ணம்.

“வாங்க அம்மான். மூஞ்சி கிறக்கம் தட்டியிருக்கே| சாப்பிடுங்க இந்தா ஒரு நொடியிலே திரும்புறேன்,” என்று சொல்லிப்பிரிந்தான் சிங்காரம்.

“நல்லதுப்பா!” என்று ஆமோதித்தார் சேர்வை. பிறகு, மகளைப்பார்த்து, “ஆத்தா, கஞ்சிபோடு, செமந்த பசியாய் இருக்கு!” என்றார் பெரியவர்.

“சரிங்க, அப்பா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/143&oldid=1386188" இலிருந்து மீள்விக்கப்பட்டது