பக்கம்:களத்துமேடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

களத்து மேடு

 "இதிலே என்ன சம்சயம்?. சிலட்டுர் மாப்புள்ளை சரவணன்தான் உனக்குப் புருசன்!... ஏதுக்கு இப்பிடிக் கேட்கிறே?... ஒஹோ இப்பத்தான் யாபகம் வருது. எம் பேரிலே உண்டாகியிருந்த களங்கத்தைப் பத்தி துண்டுமுறி” சாப்பிலே அவுக பேசினாங்களே, அது சம்பந்தமாப் பேசுறீயா?... அதெல்லாம்தான் தீர்ந்து பூடுச்சே?...நான் கொண்டுவச்சிருந்த செல்லாயி காலமானசங்கதியோட எல்லாத் தொல்லையும் கழிஞ்சிருச்சுதின்னு செப்பிட்டாங்களே சரவணன் மாப்பிள்ளே?. இதுபத்தி ஒங்கிட்டவும் காலம்பற ஒடியாந்து விளக்கிப்பிட்டாங்களாமே?...வயல் வரப்பிலே அவுகளே நேருக்கு வந்தும் எங்கிட்டே சமாதானம் சொல்லி, தேதி வைக்கச் சொல்லிட்டாங்களே?." சேர்வை பேசினார்.

"அல்லாம் சுத்தம் தானுங்க, அப்பா, அது குறிச்சு உங்க காதிலேயும் ஓதிட்டாங்களா? எங்கிட்டவும் மூச்சுக் காட்டினது ஒட்டுக்கு மெய்தானுங்க!" என்று ஒப்புதல் மொழிந்தாள் தைலம்மை.

"பின்னே இதிலே என்ன சங்கடம்? "

"இருக்குங்க சங்கடம்!... அந்தச் சிலட்டூர் மச்சான் காரக என்னையே கட்டிக்கிட துடிக்கிறாக! நம்ம அயித்தை மவனும் என்னையே கொண்டுக்கிட வேணும்னு தவம் இருக்காகளே?"

"இதென்ன புதுக் கதை?"

"புதுக் கதைதான், ஆனா, பழங்கதை புது உயிர் கொண்டிருக்குது. சங்கதி அம்புட்டுத்தான்!...”

"சிங்காரம் நம்டிவீட்டுக்கு முறை மாப்பிள்ளையா வர வேண்டியவன்தான். ஆனா, அதுக்குத்தான் ஆத்தா

ஒப்புதல் இல்லாம, அவனைக் கண்ணுப் புறத்தாலவே இம் புட்டுக் காலமாய்க் காட்டலயே சாமி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/145&oldid=1386212" இலிருந்து மீள்விக்கப்பட்டது