பக்கம்:களத்துமேடு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

141


"எம் முடிவைக் கேட்கிறவரைக்கும் எனக்குச் சந்தோசம் தாங்க. பணம் காசை இப்ப விளையாட விடாதீங்க ஒங்களுக்கு அது முக்கியம். எனக்கு மனசுதான் முக்கியம். நான் ஒரு சோதனை வைச்சு, இந்த மாப்புள்ளைங்க ரெண்டு பேரிலே யாரு எஞ் சோதிப்பிலே கெலிக்கிறாங்களோ, அவுக ளுக்குத்தான் நான் முந்தானை போடுவேனுங்க! அல்லாக் கதைக்கும் கூடிய சீக்கிரத்திலேயே ஒரு முடிவு காட்டிப்புடு வாளுங்க மூத்தவள்!..." என்றாள் தைலி. எதையோ நினைத்துக் கொண்டு உள்ளே போய்த் திரும்பினாள். இரண்டு பைகளைக் கொண்டு வந்து வைத்தாள். "இதுக ரெண்டும் ரெண்டு மாப்புள்ளைக்காரக எனக்குக் குடுத்திட்டுப் போயிருக்கிற பரிசுகள்!... அல்லாம் ஒவ்வொரு விதத்திலே ஒசந்த சேலை, ரவிக்கைங்க!..." என்று விவரம் கூறி அவற்றை உடைத்துக் காட்டினாள் அவள்.


அவற்றைப் பார்த்த சேர்வைக்கு வாயெல்லாம் பல்லாகி விட்டது. மறு கணத்தில் அவர் முகம் 'சூ' மந்திரக்காளி' போட்ட மாதிரியாகச் சலனம் கண்டு களை ஒடுங்கியது. "எல்லாம் ஒரே குழப்பமாயில்ல இப்ப எனக்குத் தோணுது!" என்று அவர் ஆற்றாமையுடன் சொல்லிக் கொண்டிருக்கையில், வெய்யிலில் வேர்க்க விறுவிறுக்கக் குடியானவன் ஒருவன் ஓடோடி வந்து நின்றான்.

உள்ளே போய்விட்டாள் கன்னி.

"ன்னடா, உடையப்பா!" என்று கேட்டார் சேர்வை.

"ஐயாவைத்தான் பார்க்க வந்தேன்!"

“என்னைத் தேடி வந்திச்சாக்கும்? அதுக்காகவா

மாங்குடியிலேயிருந்து நாலு கல் தொலைவுக்கு இப்படி ஓட்டம் பிடிச்சு வந்திருக்கிறே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/148&oldid=1386235" இலிருந்து மீள்விக்கப்பட்டது