பக்கம்:களத்துமேடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

145


"இப்பைக்கு இதுகளிலே எதையும் நான் கட்டிக்கப் போறதில்லை. எல்லாம் ஒரு முடிவு கண்டுதான் இனி!..."

"ஒம் மனசான மனசை பெத்த அப்பனாலே கூட படிக்க ஏலலையே, தைலி?"

"உள்ளதுதாங்க. நானு மாப்புள்ளைங்க ரெண்டுபேர் மனசைப் புரிஞ்சுக்கிடாம அவுக தந்திருக்கிற இந்த லஞ்சத்தை எப்பிடிங்க ஏத்துக்கிட முடியும்?" என்று கோபக் குரல் தூவினாள் முத்தாயி பெற்ற மகள்.

"அதுவும் சரிதான்!.கோபத்தை ஆத்திக்க, ஆத்தா!"

தைலம்மை மனச்சாந்தி பெற்றுத் திகழ்ந்தாள். "அயித்தை மவன் வாரமிண்னு சொன்னாங்க. இன்னம் காண்லையே?" என்று கவலைப்பட்டாள் அவள்.

ஆனால், அவள் அத்தை மகன் வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு உள்ளே நடந்த வாதப் பிரதிவாதங்களைச் செவி மடுத்துக் கொண்டிருந்த துப்பு அவளுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை!

கதிர்க் கொத்து 16

தைலம்மையின் அரசியல்

பெருங்காரை மிண்டர் திருநாளுக்கு போய்த் திரும்பிய வில்வண்டியிலிருந்து இறங்கிய தைலம்மை திருப்பூட்டிய திருமகள் போன்று பொலிவு பெற்று விளங்கிய கோலத்துடன் வாசலில் நடந்து வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் அந்திச் சிந்துவரம் அவளுக்குத் துணை சென்றது.

சுவரில் தொங்கிய கண்ணாடி அவளை வருந்திக் கூப்பிட்டது. அவள் ஒன்று சேர்ந்து நடந்தாள். சீதளத் தென்றல் மெல்ல வீசியது. ஆடியைப் பார்த்தாள் பாவை. நட்டுக்கள் துலாம்பரமான கவர்ச்சியுடன் விளங்கின. தனக்குத் தானே

க. மே - 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/152&oldid=1386264" இலிருந்து மீள்விக்கப்பட்டது