பக்கம்:களத்துமேடு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

களத்து மேடு


பரவசமான நிலையை மீளவும் எய்தினாள். "ஒன்ன பெத்த முத்தாயியே மறு பொறப்புக் கொண்டு வந்திருக்கனை தோணுது, தைலி!” என்று பொன்னாயி சொன்னதுதான் எத்தனை உண்மை!...

பூச்சரத்தைக் கழற்றி பேழையில் வைத்துத் திரும்பினாள் தைலம்மை.

"ஆத்தா வந்திட்டீயா?" என்று கேட்டவாறு வந்தார் தைலியின் தந்தை.

"ஆமாங்க," என்று பதில்மொழிந்தாள் சேர்வையின் புத்திரி. அவள் சிம்மினி விளக்கைக் கொளுத்தினாள். அடுப்படியை அடைந்தாள். சவுக்குமார் இரண்டைக் கையில் பற்றியவளாக, அடுப்பின் முன் குந்தி தீப்பற்ற வைத்தாள். இருட்டின் தடிப்பு உட்புறம் கனத்து வந்தது.

"ஆத்தாளுக்கு நாள் முச்சூடும் அடுப்படியிலேவேகிறது தான் அலுவலாப் போச்சு. ஆனா, பங்குனி வந்திட்டா இந்த வேலை வெட்டி குறைஞ்சிரும்," என்றார் சேர்வை.

"அப்பவும் நான்தானுங்களே சோறு ஆக்க வேனும்?"

"வேலை செமந்து இருந்தாக் கூட, அப்ப ஒரு புது உற்சாகம் ஒடுமில்ல உன் மனசிலே!"

"அதெல்லாம் இல்லைங்க. பெத்தவுகளுக்கு எங்க கடமையைச் செய்யிறதுதானுங்களே, எனக்குச் சந்தோசம் குடுக்கும்!”

"ஒனக்கு வக்கணையாப் பேசுறதுக்கா சொல்லித்தரணும்?... ஊம், இந்தக் கெழட்டுக்குத்தான் இனிமே சோத்துக்குத் திண்டாட்டம் வரப் போவுது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/153&oldid=1386271" இலிருந்து மீள்விக்கப்பட்டது