பக்கம்:களத்துமேடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

149

கண்களைத் துடைத்துக் கொண்டு அடுப்பை மேலும் ஊதினாள் அவள். உலைத் தண்ணீர் கொதித்தது. சீரகச் சம்பா அரிசியைக் குண்டானில் களைந்து உலையில் போட்டாள். நெருப்பைத் தள்ளிவிட்டாள். உசிலைச்சுள்ளியைத் திணித்தாள். விட்டத்தில் பறந்த வௌவால்களின் கூச்சல் மிதந்து பரவியது.

விளக்கைப் பழமென நம்பி வட்டமிட்டன இரண்டு விட்டில்கள்.

“ஐயா இல்லீங்களா?” என்றொரு குரல் கேட்கவே, வாசலுக்கு வந்தாள் தைலி.

தெரிந்த ஆள் ஒருவன் வந்து நின்றான். “நெல்லு ஒரு பொதி விலைக்குத் தாரமிண்ணாங்க,” என்றான்.

“நெல்லு இல்லைங்க. உபரியைத்தான் அரசாங்கத்திலே பறிச்சுக்கிட்டாங்களே!” என்றாள்.

அப்போது சேர்வை வந்தார். விவரம் அறிந்தார். “நெல்லு பொதி தொண்ணூறு தேவையா?” என்று கேட்டார்.

குடுங்க! “அப்பா, அரசாங்கத்துக்குத் தெரியாமல் இன்னமும் நெல்லைப் பதுக்கி வச்சிருக்கீங்க?... இது துரோகமில்லையா!”

“துரோகத்தைப் பத்திப் பேசினால் பொழைக் முடியுமா? நீ சும்மா உள்ளாறப்போ,” என்று காட்டமாகச் சொல்லிப் பணத்தை சுளைசுளையாக எண்ணி வாங்கினார். “பின்னாடி வா!” என்றார்.

கொல்லைப் புறத்தில் வைக்கோல் பட்டறையின் அடியில் இருந்த நெல் மூட்டைகளை எடுத்து அளந்து கொடுத்தார். “நாட்டைப் பத்தி நமக்குக் கவலை இருந்தால், நம்பளைப்பத்தி யாரு கவலைப்படுவாங்க?...அவனவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/156&oldid=1386262" இலிருந்து மீள்விக்கப்பட்டது