பக்கம்:களத்துமேடு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

151

கைவிளக்கைத் தூண்டிவிட்டாள் தைலி தகப்பன் முகத்தில் வேதனை புள்ளி வைத்திருந்ததை அனுமானித்துக் கொள்ளத் தவறவில்லை அவளது கன்னி மனம், “அப்பா, என் வாழக்கை வெறும் பணம் காசிலே மட்டும் அமையிற்தை விரும்பலை நான்!... அதுக்குள்ள வேசம், அந்திசு; கிராக்கி சவடால் எல்லாம் நித்தியமில்லே!...ஆனா, என்னோட வாழ்க்கை தூய்மையான அன்பு என்கிற அடித்தளத்திலே, அமைய வேணும்னு நெனைக்கிறேன் நான். இதுதான் உசிதம்னு எனக்குப்படுது! ... பணம் காசுக்கு இல்லாத மதிப்பு இதுக்குத் தான் இருக்கு. பணம் இன்னைக்கி வரும் ; நாளைக்குப் போயிடும். வாழ்க்கை வருமுங்களா?” என்றாள் தைலம் மை, அவள் உணர்ச்சிச் செறிவுடன் பேசியதால், கோல விழிகளில் ஈரம் விளைந்தது.

“உன் இஷ்டப்படி முடிவு சொல்லிப்பிடு. இனிமே இதைப்பத்தி உன் வாயைக் கிண்ட மாட்டேன்! சாமி ஆணை இது!” என்றார் சேர்வை. “ஆமா, சிங்காரம் மூந்தாநாள் பழஞ் சோறு சாப்பிட்டுப்புட்டுப் போனதி லேருந்து இங்கிட்டு வரலையே?... என்று விசாரித்தார்.

“இல்லீங்க; பாவம்!” என்று இரக்கப்பட்டாள் அவள்.

“விதி போடுற நாடகம் இம்புட்டு கமுக்கமாய் இருக்கும்னு எனக்கு இம்மா நாளும் புரியவே இல்லை!”

அவள் மௌனமானாள்.

“காட்டுப் பூனை வீட்டுக்கு ஏன் வந்தது?”

அப்போது, “ஆண்டே!” என்று குரல் வந்தது.

சேர்வை வெளியே வந்தார்.

பள்ளன் சாம்பான் வாசலின் தலைப்பில் மூட்டையுடன் நின்றான். அவன் சொந்தக்காரன் ஒருவனும் இன்னொரு மூட்டையுடன் காட்சி கொடுத்தான். “குத்தகை நெல்லு ரெண்டுகலம் இருக்குங்க ஆண்டே கோவத்துக்குப் பயந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/158&oldid=1386274" இலிருந்து மீள்விக்கப்பட்டது