பக்கம்:களத்துமேடு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

களத்து மேடு

கொண்டாந்துப்புட்டேங்க. இனிமே எங்க வூட்டு அடிப்படியிலே எத்தனை நாளைக்கு பூனை குடியிருக்கப் போகுதோ, அது எங்க சன்னாசிச் சாமிக்குத்தான் வெளிச்சம்! என்று மெல்லிய தொனியில் தெரிவித்தான் அந்த ஏழை.

எல்லா நடப்பையும் கவனித்தாள் தைலி.

மரக்கால் எடுக்க உள்ளே சென்றார் சேர்வை.

“சாம்பான்! நீ கிலேசம் காட்டாதே! எங்க அப்பார் இல்லாத கடுத்தத்திலே இங்கிட்டு வா அப்பைக்கப்ப ஒனக்குப் படி அளக்கிறேன், எனக்கு உள்ள படி நெல்லிலே தாரேன், எஞ்சாப்பாட்டைக் குறைச்சுக்கிட்டாப் போவுது!” என்று சன்னமாகச் சொன்னாள் தைலி.

“ஆத்தா, நீ நல்லா இருப்பே! ஒங்குடி நல்ல விளங்கும், தாயோ?” என்று கை தொழுதான் சாம்பான்.

“அதற்குள் சேர்வை வந்து தொலைந்தார். என்னாடாலே, கூழைக் கும்பிடு போடுறே?” என்று இரைச்சல் போட்டார்.

“இது மெய்யான கும்பிடுங்க. அன்பு காட்டின ஆட்டுக்குக் கும்பிடு கொடுத்தேனுங்க!” என்று உருக்கமாக உரைத்தான் சாம்பான். நா தழுதழுத்தது. நிமிர்ந்து நின்றான். கண்கள் கலங்கின.

“அப்பிடியா? சந்தோசம். நன்றி மறக்காம இருந்தாச் சரி என்று சொல்லி, நெல்லை அளந்தார். “குறுணி, பதக்கு” என்ற எண் வரிசை தொடர்ந்து, இருபத்தி நாலு மரக்கால் என்று நின்றது. ஒருபிடி நெல்லு குறையுது. தொலைஞ்சு போ!” என்றார்

ஏழைகள் தலைதப்பிச் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/159&oldid=1386278" இலிருந்து மீள்விக்கப்பட்டது