பக்கம்:களத்துமேடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

களத்து மேடு


ரெண்டு போட்டி மாப்புள்ளைங்களையும் தந்த வச்சு, மாலையை வீசிப்பிடு. அது யாரு கழுத்திலே விளுதோ, அவுகளையே நீ கொண்டுக்கடி!..." என்று சிரித்தாள் பொன்னாயி.

இதைக் கேட்டதும், தைலம்மைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது, "இந்தாப்பாருடி, பொன்னாயி! இதுமாதிரி கிண்டலுக்கும் நைத்தியத்துக்கும் உன்னைத் தொட்டு பொறுத்துக்கிட்டிருக்கேன். ஆபத்து சம்மத்து, ஒரு தூரம், தும்மலின்னா எங்களுக்குச் சோறு ஆக்கிக் கொட்டுறவ நீ. அந்த ஒரு நடப்புக்காவ நானு அடங்கியிருக்கேன்!....வேறே அசலா இருந்தாக்க, இந்நேரம் சதைச்சு, ஆக்கினை பண்ணியிருப்பேன்! நடந்ததையும் நடக்கிறதையும் நெனைச்சு, இனிமே என்னா நடக்கப் போகுதோன்னு குமைஞ்சுக்கிட்டு குந்திக்கிட்டிருக்கேன். நீயே இப்பிடி எம்முன்னாலே நைச்சியம் பேசினேயின்னா, இதுபத்தி அசலவங்க என்ன தான் பேசமாட்டாங்க? மாங்காய் புளிச்சதோ, வாய் புளிச்சதோன்னு பேசுறது அவ்வளவு குளுமைப்படாது! ஆமா. அண்ணைக்கே எங்க அயித்தை மவன் அக்கரைச் சீமையிலேருந்து வந்திருந்தா, காதும்காதும் வச்சாப்பிலே கண்ணாலம் எப்பவோ கை கூடியிருக்கும். அவுகளைக் காணாததை ஒட்டி, வேறே இடத்திலே சம்பந்தம் பேசி பரிசம் போடுற தருணத்திலே, ஆத்தா பெரியவ அயித்தை மவனை இந்த மண்ணிலே கொண்டாந்து நிறுத்தியிருக்கா. அவ விளையாட்டை நெனைச்சு நான் மறுகிக்கிட்டிருக்கேன்! இந்த ரெண்டு பேருமே எம் பேரிலே மையல் கொண்டிருக்காங்க. இவுங்களிலே யாரை ஏத்துக்கறது, யாரை மறுக்கிறது. -இவுகளை ஒருத்தரை எப்பிடி ஏத்துக்கிறது-இன்னொருத்தரை எப்பிடி மறுக்கிறதுன்னு புரியாமத் தவிச்சுத் தண்ணியா உருகுறேன் நான். இம்மாங்கொத்த இடசங்கத்திலே ஆம்புட்டு, நான் முழிச்சு திக்குமுக்காடிக்கிட்டு இருக்கேன். படுத்தா தூக்கம் வரல்லே. எந்திருச்சா, வேலை பார்க்க செகல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/167&oldid=1386148" இலிருந்து மீள்விக்கப்பட்டது