பக்கம்:களத்துமேடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

167

அந்தத் தாய் சென்றதிக்கையே வெறித்து நோக்கியவாறு நின்ற தைலியின் கண்களினின்றும் சுடுநீர் சுரந்து வழிந்தது. ‘அட தெய்வமே! இடறின காலே இடறுதே?... அப்பாரு போட்டு ஆடின வேசம் இன்னம் என்னென்ன மிச்சம்சொச்சம் இருக்குமோ?’....என்று மாளாத வேதனைச் சுமையுடன் நலிந்தது, சமைந்த அப்பெண்ணின் உள்ளம்.

கண்ணிரின் கறை அவளது செழித்த கன்னங்களின் கரையில் ஒட்டி உறவாடிக்கிடந்தது.

அடுப்பு பற்றி எரிந்தது.

தைலம்மையின் இதயத்தில் எரிந்த தீ அடுப்புக்கு இடம் மாறியது போலும்!.

கோடிவீட்டுக் கோவிந்தம்மா புருஷன் திருக்கை மீனும் கையுமாக அவ்வழியே சென்றான்.

‘அப்பன் காரவுக கோபத்துக்கு இனிமே நான் ஈடுகட்டியாகணும்!... அவுகளுக்கென்ன?... அவுக சொகந்தான் அவுகளுக்கு ஒசத்தி!... குடும்பத்தோட வழிவழி வந்த கட்டுக் கோப்புப்பத்தியும் கவுரவத்தைப்பத்தியும் என்னோட வார காலத்தைப்பத்தியும் யாருக்கு என்ன அக்கறை!’ அவள் பெருமூச்சைப் பிரித்தாள்.

அவளுக்குத் திரும்பவும் தன்னுடைய மணவினைப் பிரச்சினை நினைவில் ஓடியது ; புரையாக ஓடியது, மாப்புள்ளைக்காரக ரெண்டு பேரும் நாள் நெருக்குவெட்டிலே என்னைத் தன்னக்கட்டிப் பார்க்கிறதுக்கு ஆள் மாத்தி ஆள் ஒருத்தருக்குத் தெரியாம இன்னொருத்தர் வருவாங்க எம் மனசை அவுங்க அவுங்க பக்கத்துக்கு வசப்படுத்துறத்துக்கு இந் நேரம் என்னென்ன மாயமெல்லாமோ செஞ்சிருப்பாங்க, நானுமட்டும் அன்னிக்குத் திருநாளப்ப அப்பிடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/174&oldid=1386919" இலிருந்து மீள்விக்கப்பட்டது