பக்கம்:களத்துமேடு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

களத்து மேடு


"ஆமாங்க, என்னோட தலைச் சுழி இப்ப அவங்க, ரெண்டு பேரையும் சுத்தத் தொடங்கியிருச்சுப் போலே!"

தைலம்மையின் தொண்டை அடைத்தது!

கதிர்க் கொத்து 19

"ஆத்தா!..."

முகில் வானம் மழை பொழிந்து தானே தீரவேண்டும்?

மழை பெய்தது.

கூடவே, வெய்யிலும் அடித்தது.

குடியிருப்பு வாண்டுகள் "டோய்!" காக்காய்க்கும் நரிக்கும் கண்ணாலம் டோய்!" என்று கைதட்டிக் கூச்சல் பரப்பினர்.

வானத்தில் இந்திரவில் வண்ணம் பரப்பிக் காட்சியளித்தது.

நீராடி, புத்துடை துலங்கக் காட்சி தந்த அழகுக் கன்னி தைலம்மை எழிற் சோபிதம் குலுங்க வாசற்புறம் வந்து வானத்துக் கனவையும் வையத்துக் கனிவையும் ஒருசேர அனுபவித்த வண்ணம், மேற்கண் இரு காட்சிகளையும் கண் கொட்டாமல் பார்த்தபடி நின்றாள். மறுகணம் அவளிடமிருந்து நீள் மூச்சு புறப்பட்டது. அவள் தனக்குத் தானே ஒரு முறை தலையை உலுக்கிக் கொண்டாள். கொண்டையிலிருந்த பூச்சரத்தினின்றும் ஒரேயொரு மல்லிகைப்பூ உதிர்ந்து மண்ணில் விழுந்தது. 'ஆமா, அதான் எம் முடிவாக்கும்!..'

இளங்கிரணங்கள் அவளது மென்மை மிகுந்த பாதங்களில் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பிரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/177&oldid=1386213" இலிருந்து மீள்விக்கப்பட்டது