பக்கம்:களத்துமேடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

11


குலையாமல் கேட்டார்; மீசையை முறுக்கியதோடு நின்று விட்டார்; மீசையில் விளையாடிய கோல நிலாவை எதுவும் செய்யவில்லை. அவரது விழி விரிப்பு மாய மந்திர ஜமூக்காளமா, என்ன, மகளின் முகத்தைக் கண்டே அகத்தைப் படித்துக் கொள்ள! அவருக்கு ஒன்றும் மட்டுப் படவில்லை, மீண்டும் பலமாகக் கனைத்தார். கையிலிருந்த முடிச்னச முகப்பு ஒட்டுத் திண்ணை முந்தலில் வைத்தார். பதனமாக, 'ஒருக்கா', இதிலேதான் மாப்புள்ளை கமுக்கமா ஒளிஞ்சு குந்திக்கிணு இருக்காங்களோ?' என்று ஒரு நையாண்டி நினைப்பும் அவளுக்கு ஓடாமல் இல்லை. ஆனால், மனம் ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கையில், கேலிக்கு இடம் ஏது?

கனைப்பின் அர்த்தத்தைக் கன்னி அறியமாட்டாளா? அறிவாள். அறிந்தவன் தானே! "அப்பா!"

ஆவல் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டது, "என்னாம்மா?"

"சத்த முந்தி காதுக்கும் காதுக்கும் பொருத்தி வச்சுப் பேசின பேச்சு ஒட்டுக்கும் சுத்தம் தானுங்களே?"

"மறுகா...?"

"அப்பாலே...?"

"வாயைத் தொறம்மா!"

"நீங்க பேசிவந்திருக்கிற அந்தச் சிலட்டூர் மாப்புள்ளைக்காரகளைப் பத்தி ஒங்க மனசு நாளைப் பின்னக்கி எப்பவுமே தடம் புரளாதுங்களே?..."

"ஊஹும்! சத்தியம் இது!"

"ஏன்னா , நாளைக்கு இந்தச் சம்பந்தம் சாடிசன் முறிஞ்சு போச்சுதின்னாக்க, அப்புறம் இந்தச் சங்காங்குடியிருப்பு அறுவது குடிகளும் நம்பளை வறுத்துப் போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/18&oldid=1386123" இலிருந்து மீள்விக்கப்பட்டது