பக்கம்:களத்துமேடு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

175

"அல்லாம் சட்டெனத் தெரிஞ்சுப்புடும். நீபோ! நீ எங்க வூட்டுப்பக்கம் வந்தது தெரிஞ்சாக்கூட, சித்தப்பன் ஒன்னைத் திட்டுவாங்க!"

"ஆமா, ஆமா!" என்று சொல்லி ஓடினாள் பூங்கா வனம்.

தைலல்மை பெருமூச் செறிந்தாள், வாசலுக்கு வந்தாள். மரங்களுக்கு மத்தியில் வெய்யில் கனன்றது. ஆத்தா மூத்தவளின் திருச்சந்நிதியை அடைந்து சேவித்துவரவேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. வயல் பக்கம் சென்ற சேர்வை திரும்பாததால், வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

ஒழுங்கை வந்தது.

குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடினர்.

நடைபயின்றாள். தைலம்மை அழகும் அவளுடன் நடைபயின்றது.

செக்கடிச் சத்தம் காற்றில் மிதந்தது.

பொன்னாயி எதிர்கொண்டாள்.

"வாடி, பொன்னாயி கோயிலுக்கு" என்று கூட்டிச் சென்றாள்.

சங்கரன் குடியிருக்கப்பட்ட இடத்தில் அமைதி என்றுமே இருந்ததில்லையே?

விதியின் வினையாகி, வினைக்கும் விதியாகி, அபயக் கரம் காட்டிப் புதிய புன்னகைக் கோலம் ஏந்திக் காட்சி தந்து கொண்டிருந்தாள் அந்த, ரத்தக் காட்டேறி அவள் உலகாளும் தாய் அல்லவா? அவள் சிரிப்புக்கு ஈடேது, எடுப்பேது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/182&oldid=1386246" இலிருந்து மீள்விக்கப்பட்டது