பக்கம்:களத்துமேடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

177


முன்னே தைலம்மை நடந்தாள். கால் விரல் மிஞ்சிகள் சுநாதம் எழுப்பின. தொடர்ந்தாள் தோழி.

தைலிக்கு மறுபடியும் நெஞ்சு வலித்தது. இறுகப் பற்றிக் கொண்டாள் நெஞ்சை மார்பின் மையத்தில் அழுந்திப் பதிந்திருந்த சங்கிலி உறுத்தியதோ?

களத்துமேடு காட்சி தந்தது!.....

அங்கே சரவணனும் சிங்காரமும் உட்கார்ந்து தாயம் ஆடிக் கொண்டிருந்த காட்சியைப் பனங்கருவில் வந்த போதே தைலம்யை கண்டு கொண்டான். அவள் மனம் கட்டு மீறித் துடிக்கத் தொடங்கிவிட்டது. நடந்தாள். அவளுடன் ஊழிப் புயலும் நடந்திருக்க வேண்டும். தள்ளத் தள்ளாடி நடந்த தைலி, அப்படியே களத்துமேட்டின் முகப்பிலிருந்த பெரிய புளிமரத்தில் மோதிக் கொண்டாள் மறுகாணம் நிலை குப்புறத் தரையில் சாய்ந்து விட்டாள் தைலம்மை. தரையில் கிடந்த சுக்கான் கல்லில் அவள் மண்டை அடிபட்டது!

"ஐயையோ! என்று அலறினாள் பொன்னாயி.

தைலியின் நெற்றிமேட்டில் ரத்தம் பீறிட்டது.

அதற்குள், சரவணனும் சிங்காரமும் அங்கு ஓட்டமாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள்!

சேலை முனையைக் கிழித்து, தைலியின் நெற்றித் திட்டில் சொட்டிக் கொண்டிருந்த உதிரத்தைத் துடைத்தாள் துணிக் கிழிசலை அவள் நெற்றியைச் சுற்றிக் கெட்டியாகக் கட்டுப் போட்டாள் பொன்னாயி. அவள் காலை உதறிக் கொண்டு திடுக்கிட்டுக்குதித்த போது பாம்பொன்று, தரையில் கிடந்த தைலம்மையின் காலடியினின்றும் ஓடியதைக் கண்டாள். அவள் மேலும் பதறினாள்.

அக்காட்சி சரவணனுக்கும் சிங்காரத்திற்கும் தட்டுப்பட்டது. அவர்கள் காதுகளில், "ஐயையோ! உள்ள

க. மே.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/184&oldid=1386260" இலிருந்து மீள்விக்கப்பட்டது