பக்கம்:களத்துமேடு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

181


புடவையையும், ரவிக்கையையும் ஒழுங்கு படுத்திக் கொண்டு எழுந்தாள் தைலம்மை. மூச்சு கூட்டி நின்றாள் சேலையின் முக தலைப்பைக் கொய்து முகத்தைத்துடைத்துக் கொண்டாள். குங்குமமும் ரத்தத்திலகமும் ஒன்றினின்றும் ஒன்று பிரிக்க முடியாத பாவைனயில் பளிச்சிட்டுத் திகழ்ந்தன. தலைமுடியைக் கோதி விட்டாள். கொண்டைப் பூவைச் சரிப்படுத்தி விட்டாள். தலையை நிமிர்த்தினாள்; தந்தையைக் குறி வைத்து விழி விரித்தாள். "அப்பா! வாங்க நம்ம வூட்டுக்குப் போவோம்!....." என்று கூறினாள். அவளது பேச்சில், குரலில், பான்மையில் இப்போது புத்தம் புதிய தெளிவு இருந்தது, முகத்தில் வேர்வை இருந்தது.

தந்தையும் மகளும் புறப்பட்டார்கள்!...

அவர்களுக்குக் குறுக்கே காகம் ஒன்று சோற்றுக்கைப் பக்கமாகப் பறந்து சென்றது. நல்ல சகுனம் காட்டிப் பறந்து சென்றது.

உச்சி வெய்யில் இப்படியா வறுத்துக் கொட்டும்?

களத்துமேட்டின் சந்தடி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டே இருந்தது.......

நிறைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/188&oldid=1385508" இலிருந்து மீள்விக்கப்பட்டது