பக்கம்:களத்துமேடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 களத்து மேடு செட்டிய ஆட்டுச் சனங்களொப்ப-எங்களுக்கும் ஒரு விடிவு பூத்திடுமா? ஊம்.எங்க குடியிருப்புக்குச் சோதனைக் காலம் வந்துக் கிட்டிருக்குதே! மகமாயியோட சித்திரைத் திருநாளிலே முதல் காளாஞ்சி தவசல் இருக்குது... அப்பாலே ஊர்ப் பஞ்சாயத்து முடிச்சு வேறே! சரி... நல்லதுங்க! உங்க ‘சூனா பானா வை விசாரிச்சதாச் சொல்லுங்க!... உங்க செட்டியார் தர்மசிந்தனைக்காரரு!... மனுசராப் பொறந்த வுங்க அப்படித்தான் இருக்கோனும் இல்லாட்டி, கருஞ்சனங் களுக்கு, கண்ணானத்திலே வடிச்சுக் கொட்டுறத்திற்கு மனசு வருமாக்கும்?. சரி, போயிட்டு வாறீங்களா? வழியனுப்பி வைத்தார். பிறகு சாப்பிட்டார். வயற்புறம் சென்று திரும்ப உத்தேசம். தைலம்மையின் தோழிகள் பொன்னாயி, பூவாயி, சிங்காரம், அசோதை, அகிலாண்டம், அன்னக்கொடி ஆகியோர் வந்தார்கள். தண்ணிர் கொண்டுவரத்தான் இத்தனை பெரிய பட்டாளம் கிணறு தோண்ட வல்ல!. எல்லோரையும் அனுப்பிவிட்டாள். அந்திக்குத் தான் அவள் கிணற்றடிக்குப் போவாளாம் ! சேர்வை தாய் வீட்டில் நின்றவாறு புறப்பட ஆயத்தப் பட்டுக் கொண்டிருந்தார். அது தருணம், வாசலில் மாட்டு மணிச்சத்தம் அற்புதம் சேர்த்து ஒலிக்கவே, தைலம்மை வெளிப்புறம் வந்தாள். வாசலில் நின்ற ரேக்ளாவிலிருந்து சிலட்டுர் சாமியப்பக் கங்காணியின் மைந்தன் சரவணன் இளமீசையை நெருடியபடி குதித்து நின்றான். வாங்க! - என்று வரவேற்புச் சொன்னாள் தைலம்மை, அதிர்ஷ்டம் வீடுதேடிவரும் தருணம், அதிசயப் படாமல் இருக்க முடியுமா ? "ஆமா " நகைக்கீற்று இனிக்காதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/29&oldid=1386210" இலிருந்து மீள்விக்கப்பட்டது