பக்கம்:களத்துமேடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

27


சொல்லிக்கொண்டே காப்பியைக் குடித்தான் சரவணன். உதடுகளைத் துவாலையின் முனை கொண்டு துடைத்தான் அவன். கழுத்துப் பகுதியையும் சுத்தப்படுத்தினான். பவுன் சங்கிலி தளதளத்தது சுருட்டை முடிக் கிராப்பை வகிடு பார்த்த வாகாக ஒதுக்கி விட்டுக் கொண்டான். முண்டா பனியனை இழுத்து விட்டான்; காற்று மேனியை ஆரத் தழுவியது. ஆடுதுரை வாழைகளிடம் காற்றுக்குப் பஞ்சமா, என்ன?

சரவணன் யதேச்சையாக ஈசான்ய மூலையில் விழிகளை விரித்த போது, அவனது விழி விரிப்பில் தலை சாய்த்துச் சாய்ந்திருந்த தைலம்மையின் கடைக்கண் வீச்சின் வல்லமையை அவன் தரிசித்தான். சரவணனிடம் அழகுக்குக் குறை இருக்குமா?-அவன் அழகாகப் புன்முறுவல் பூத்தான். அவனது இளநகையின் காந்த ஒளி அந்தக் கன்னித் தேவதையின் காந்தக் கண்களை கூசச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவள் 'கடலேகதி' என்று ஒச்சமின்றி வேகம் பாய்ச்சி மறைந்திருக்க மாட்டாள். தேவதை என்றால், சும்மாவா?

"ஊம், அப்பாலே....?"

மறுமுறையும் விபூதிப்பட்டை அடித்துக் கொண்டு இடதுகாலை மடக்கியபடி வந்து அமர்ந்தார் சேர்வை. "நீங்க இப்படி திடும்னு வந்து குதிப்பீங்கன்னு தெரியலே. தெரிஞ்சிருந்தா; கவுச்சி ஏதாச்சும் சேகரம் செஞ்சு வச்சிருப்பேன்!..."

சரவணன் தலையைக் குனிந்தபடி, "என்னமோ நினைச்சுக் கிட்டேன். பரிஞ்சு வந்து நிண்ணுப் புட்டேன் எனக்கென்னமோ, அப்பைக்கு அப்பத் தோணுறதை எண்ணி ஆராஞ்சு செயல் படுறதுதான் என் மட்டுக்கும் முடிவு-சட்டம்-சங்கதி எல்லாம்!..." என்று அழுத்தமாகச் சொன்னான். நெஞ்சில் நின்று சதிர் ஆடிக் கொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/34&oldid=1386293" இலிருந்து மீள்விக்கப்பட்டது