பக்கம்:களத்துமேடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

களத்து மேடு


ருந்தாளே தைலம்மை, அதன் தடயம் பற்றி யாருக்கு என்ன அக்கறை?...பலாப்பழத்தை வகிர்ந்து விட்ட மாதிரி அமைந்திருந்த இளம் மீசையைத் தடவிவிட்டுக் கொண்டான் அவன்.

"எங்க ஊரை நாடி வந்ததுக்கு வேறே எதுனாச்சும் காரண காரியம் உண்டுங்களா?..." என்று மீண்டும் தூண்டினார் சேர்வை. தட்டி முடிந்தார் குடுமியை, 'வந்த வாகிலே, தைலியை நல்லா பார்த்து நிம்மதி அடையவும் இவுக வந்ததாக இருக்குமோ?.. யார் கண்டது இந்தக் கலி காலத்து விடலைங்க போக்கை?..."

"ஊம்" என்று சொல்லிவிட்டு மௌனம் சாதித்தான் சரவணன்.

மௌனம் காலத்தை விழுங்கியது.

அவன் சாதித்த மௌனத்தின் இறுக்கமான அழுத்தம் சேர்வையை அழுந்திப் பிடித்தது உள்ளம் 'திக்' கென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.

பண்ணைக்காரன் பிரமன் வந்தான். மொட்டை வண்டியைப் பூட்டினான். மாசிப்பட்டம் எள் விதைப்புக்கு ஏர்கள் வந்து சேர்ந்த விவரம் சொன்னான். "நானு வடக்கிட்டுப் போயி குருவை நாத்துக்கு சொல்லி அச்சாரம் கொடுத்துப்புட்டு வாரேனுங்க!" என்று பணம் பெற்றுப் பிரிந்தான்.

அப்போது "அப்பா!" என்று சன்னக்குரல் எடுத்துக் கூப்பிட்டாள் தைலம்மை இரண்டாங் கட்டில், அடுப்படிச் சுவரைச் சார்ந்திருந்த தூணில் முட்டுக்கொடுத்து நின்றாள். அவள் தங்கக் கொலுசுகள் தளர்ந்தன. நாணம் தளரவில்லை. மூக்கின் நுனி செம்மை கூட்டிற்று.

செங்காளியப்பன் சேர்வை எழுந்து நடந்தார். மகள் கேட்ட விவரங்களுக்கு விடை சொன்னார். விருந்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/35&oldid=1386300" இலிருந்து மீள்விக்கப்பட்டது