பக்கம்:களத்துமேடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

29


சாப்பாடு என்றால், சிலட்டூர் கங்காணியார் மகன் அப்படியே சொக்கிப் போய்விட வேண்டுமல்லவா?

திரும்பினார் சேர்வை. "ம்...மறுகா?" என்று சொடுக்கி விட்டார்.

"எல்லாம் ஒங்களைப்பத்தின விசயந்தானாக்கும்!..." என்று கனம் முடுக்கிச் சொன்னான் சரவணன்.

சேர்வையின் கறுத்த முகம் பின்னும் கறுத்தது. செம்மை பாய்ந்து கறுத்தது. "என்னாங்க ஓங்கவீட்டிலே ஏதாச்சும் தகவல் சொன்னாகளா நானு அங்கிட்டு வந்து திரும்பினடியிலே?... சம்பந்தம் சாடிக்கை புடிக்கவைன்னாங்களா வூட்டுப் பெரியவுக?.... இல்லே, நீங்க எங்களுக்குச் செய்யவேண்டிய நம்ம ஜாதிவளமைக் கொத்த சங்கதிகளிலே கூடுதல் கொறைச்சல் வருதா?.... முச்சரிக்கை ஏடு எழுதி, பொன் மாத்தி, பரிசம் போடுறப்ப நீங்க பொண்ணுவூட்டுக்குச் செய்யவேண்டிய-செய்யக் கட்டுப் பட்டிருக்கிற பரிசப் பணத்திலே ஏதானும் சங்கடமா? இல்லை, எங்க தைலம்மைக்கு நாங்க செஞ்சிபோட வேண்டிய நகை நட்டுங்களிலவும் ஏட்டிக்குப் போட்டி சொல்லுறாங்களாங்காட்டி?.." வேதனை உள்ளடங்க, வெய்துயிர்ப்பு வெளிவாங்கியது.

"அதெல்லாம் இல்லீங்க!.... எம் பேச்சுக்கு எங்க வூட்டிலே எங்க அப்பா, ஆத்தா யாரும் எப்பவும் மறுப்பு சொல்லவே மாட்டாக! வந்து..." என்று பாதியில் பேச்சைத் துண்டித்துவிட்டு, பின்புறம் திரும்பி, அங்கே அக்கணம் தைலம்மை இல்லை யென்பதை ஊகம் செய்துகொண்டு, "...வந்து அல்லாம் ஒங்களைப்பத்தின நடப்புத்தாக்கல் தானாக்கும்?..." என்று இழுத்தான்.

அதற்குள் நாடி தளர்ந்தவராகத் தோன்றிய சேர்வை, கைடிப்பில் இருந்த புகையிலைக் காம்பு நுனியைக் கிள்ளி கடைவாயில் அடக்கிக்கொண்டு "சரி, புறப்படுங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/36&oldid=1386306" இலிருந்து மீள்விக்கப்பட்டது