பக்கம்:களத்துமேடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

33

செப்பப்புடாதுங்க!... ரொம்ப சத்தியான வேண்டுதலையுங்க இது” என்று நயத்துடன் உரைத்து விட்டு, சுருக்கண எட்டி நடங்க!” என்று தூண்டிவிட்டு, துாண்டில்பட்ட புழுவாக மூச்சுவாங்கி நடந்து ஓடினார்.

சேர்வை சென்ற சடுதியில், மடங்கித் திரும்பினான் சரவணன். பனங்குட்டி ஒண்டலில் ஏதோ சலசலத்தது. கூர்த்தமதி பதித்தான். “நான் தானுங்க... வெள்ளையப்பன் சேர்வை!... இப்ப போனாகளே அவுக எனக்கு மூத்தவுக... ஒண்ணாப் பொறந்த பொறப்புங்க... உங்ககிட்ட சத்தை நேரம் வாயாடனும்... நம்மவூடு எங்க அண்ணாச்சி ஆட்டுக்குக்கும் பொறத்தாலே தான் இருக்கு!...” என்றார் அந்தப் புது மனிதர்!

நீங்க முன்னாடி நடங்க... நான் வாரேன்!” என்று அன்புடன் சென்னான் சரவணன்.

வெள்ளையப்பஞ் சேர்வை குடையை அக்குளில் இடுக்கிக் கொண்டு பீடு நடை போட்டார். பட்டாளத்தான் கணக்குத் தான்.

‘என்னா கூத்துடா இது? வலைய பட்டிச் சனியனை வெலை கொடுத்து வாங்கிற கதை இப்ப யாருக்குப் பொருந்தப் போவுதோ, விளங்கலையே மாரியாயி...’

மனத்தின் வழித்துணையாயின, அழகுக் குமரியின் பேசும் விழிகள்!

சரவணன் நடை தொடர்ந்தான்.

செல்லையா டீ கடை வந்தது

உள்ளே நுழைந்தான் சரவணன். குனிந்துதான் அவன் நுழைந்தான். முன் எச்சரிக்கையுடன்தான் அவன் அப்படி துழைந்தான். எதிலும் கூடுதலான கவனம் அவனுக்கு. ஐந்து ‘கணக்கு’க்கு கங்காணியாக நிர்வாகம் புரிந்தவரின்

க. மே 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/40&oldid=1386332" இலிருந்து மீள்விக்கப்பட்டது