பக்கம்:களத்துமேடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

களத்து மேடு


நசுக்கட்டான் பட்டால், பட்ட அந்த ஓரிடம் மாத்திரம் தான் அரிக்கும்.

ஆனால் நினைவுகள் தீண்டினாலோ, உள்ளம் முழுவதிலும் அரிப்பெடுக்கும்.

ஏதேதோ நினைவுகளுடன், அவள் தலையை வழித்து முடிபோட்டுக் கொண்டு, சேலையை மாற்றிக்கொண்டாள். தேங்காய்ப்பூ துண்டு கொண்டு துவட்டினாள். கோடம் பாக்கம் சேலையும் சின்னாளம்பட்டி ரவிக்கையும் எடுப்பாக அமைந்துவிட்டன. கொண்டையில் செவந்திப்பூ, நெற்றியில் நீறு.

முகம் பார்க்கக் கண்ணாடியை எடுத்தாள். முகம் காட்டியது; பார்த்தாள். நாசித் துளைகள் புடைத்தன. தோட்டின் விளிம்பில் நீர் கட்டியிருந்தது. இடது பக்கத் தோடு ஒற்றினாள் பார்வை மேய்ந்தது. இடது கன்னத் தில் காதின் ஒரத்தில் கீழ் முனையை உரசின மாதிரி இருந்தது. ஒரு தழும்பு வடு பாய்ந்திருந்தது. எப்போது ஏற்பட்டது? நினைவு வரவில்லை! சின்னஞ்சிறு பிராயத்தில் ஏற்பட்டதாக இருக்குமோ? தீவிரமான சிந்தனையில் ஊடாடியவளுக்கு, பார்வையைக் கீழிறக்கியதும் வெட வெடத்தது. முடிச்சுக்களை நெருக்கினாள். "அன்னிக்கு அந்த அவசரக்காரி பொன்னாயி தண்ணி மொள்ள வந்தப்ப இப்படித்தான்...’’ என்று அத்துடன் நிறுத்திவிட்டு, மேற் கொண்டு அவளைப்பற்றிய ஏதோ ஒரு யோசனையின் லயிப்பில் கட்டுண்டிருந்த போது, அந்தச் சிந்தனை அவளுக்கு அப்போதைக்கு வேண்டாத ஓர் எண்ணமாகத் தோன்றியது. அதை உணர்ந்துதானோ என்னமோ, அப் போது அங்கே அவள் உயிர்ச் சேடி பொன்னாயி வந்தாள். குண்டானில் அரிசில் குறுணை இருந்தது. "பெருங்கார முண்டருக்கு வாரவெள்ளிக்கு மாசி மகத்தன்னைக்கு மாவிளக்குப் போடனும், தைலி!......’’ என்று தெரிவித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/45&oldid=1386348" இலிருந்து மீள்விக்கப்பட்டது