பக்கம்:களத்துமேடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

களத்து மேடு


காரணம்:

வாசல் திண்ணையில் மேல் வசமாய் ஏறி நின்ற வெயிலைக் காலடியில் போட்டபடி, அங்குச் "சிவனே’’ என்று சரவணன் சிந்தனை வசப்பட்டு அமர்ந்திருந்தான்!

இதைக் கண்டதும் தைலம்மைக்குக் கையும் ஒடவில்லை; காலும் ஒடவில்லை. ஆனால் நாணம் மட்டிலும் அவளது கதுப்புக் கன்னங்களிலே-கருநீல விழிகளிலே-செவ்விதழ்க் கரைகளிலே-ஒடி ஒடி விளையாடியது. கால் சங்கிலியும் மிஞ்சிகளும் ஒசைப்படுத்தின. நடையில் தன் மேனியைத் தூணுடன் மறைத்துக் கொண்டாள். பின் வசமாக இருந்த சரவணனின் சுருட்டை முடிகள் வெகு துலாம்பரமாகத் தெரிந்தன.

அவளுக்கு அந்நேரத்தில் வேறு ஒரு ஞாபகம் வந்து விட்டது. 'காலம்பறப் பொழுதிலே சித்தப்பன் காரக மகள் பூங்காவனம் தங்கச்சி இங்கிட்டு வந்து கிட்டணியிலே இந்தச் சிலட்டுர் மச்சானைக்கண்டடியும் பேயறை பட்ட தொத்து அம்மாந்தூரம் ஏதுக்கு அப்பிடி பறந்துபோச்சாம்?...' காலையிலிருந்து உறுதிக்கொண்டிருந்த இந்நினைவுக்கு யார் விடிவு சொல்ல முடியும்?...

சரவணன் மெல்லத் தலையைப் பக்கவாட்டில் திசை திருப்பிப் பார்த்தான். மாம்பழ வர்ணம் தட்டுப்பட்டது. அவன் புரிந்து கொண்டான். 'என்னா கூத்து இது!... அன்னிக்கு ஒரு திருப்பு இந்தப் பொண்ணு கேணிக்கரையிலே எங்கிட்ட எம்புட்டுத் தொளைவு மனசு விட்டு கறைச்சுது!... இப்ப இது.......ஏதுக்கு இப்படி வாயடைச்சு நிக்குதாம்?...' கைவிரல் மோதிரத்தை நெருடியவாறு சிந்திக்கத் தலைப்பட்டான்.

அவன் கனைத்துக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/47&oldid=1386362" இலிருந்து மீள்விக்கப்பட்டது