பக்கம்:களத்துமேடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

48

அவள் மேற் கொண்ட நிலையைத் தன் நெஞ்சுக் குழியினுள்ளேயே அமுக்கி விட்டாள்.

பண்ணைக்காரன் வந்து நின்றான்.

அவள் வாசலுக்கு விரைந்தாள்.

“காத்தான் துண்டிலே ரெண்டு படல் சொச்சம் தங்கிப் போச்சு...பாக்கி பூராத்திலேயும் எள்ளு போட்டாச்சு. ஆறு பேருங்க சுத்தமாய் நின்னுச்சு... நாளைக்கு வெள்ளென ரெண்டு ஏர் ஒண்டிவந்து பிரமர்சாமி தாக்கையும் முடிச்சிருமுங்க... ஐயா இல்லீங்களா, அங்கிட்டுக்கூட தலை காட்டக் காணோமுங்களே?... ” என்றான்.

அவள், “அப்பன்காரக வார சமயம். வெளியிலே போயிருக்காங்க, நம்பிக்கைக்கு ஒசந்த பண்ணை நீ இருக்கிறப்ப, வேலை முடையாப்போயிடுமா? நீ போயி குளிச்சிப் புட்டு வா, சாப்பிடலாம்...” என்று சொன்னாள்.

கடன்வாங்கிச் சென்ற பெட்டி வண்டியை விடிந்ததும் கொண்டுவந்து சேர்ப்பதாக நாட்டார் குடியிருப்பைச் சேர்ந்த நல்லதம்பித் தேவர் செய்தி தூவியிருந்த நடப்பையும் துண்டின் முடிச்சிலிருந்து கிரகித்து வெளியிட்டான் பண்ணைக்காரன். பிறகு அங்கிருந்து கிளம்பினான்.

சரவணனுக்கு வயிற்றைக் கிள்ளியது. இங்கே வருவதா, வீட்டுக்குப் போவதா என்று நெடுநாழி சிந்தித்து, கடைசியில் தைலம்மையின் மானசீகமான துண்டுதலே இம்முடிவைத் தன்னுள் அமைத்துக்கொடுத்த விந்தையை அவன் எப்படி மறப்பான் ? ...... ‘இதோட சித்தப்பன்காரக தாவாங் கொட்டையை ஏந்தி சாப்பிடச் சொன்னாகளே!.’ என்ற விவரத்தையும் அவன் நாளும் நினைப்பவனே. குப்பாயி ஊருணிக்கலங்கலில் ஒரு முழுக்குப்போட்டு வந்ததுவேறு, அவன் கண்களைக் கிறங்கச் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/50&oldid=1386376" இலிருந்து மீள்விக்கப்பட்டது