பக்கம்:களத்துமேடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

49


“நானு ஒன்னோட அயித் தைமவன் சிங்காரமாக்கும்!... அடியோடவே என்னை மறந்துபுட்டியா, தைலி?” என்று கம்மிய தொனியில் பரிதாபமாகக் கேட்டு, செய்வகை தெரியாமல் பிரமை தட்டி நின்றான் சிங்காரம்!...

கதிர்க் கொத்து 5

சிலட்டூர் மருமகள்

சிங்காரம் சுருட்டைத் தலைமுடியைத் தன்னுடைய இரு கைவிரல்களாலும் கோதிவிட்டபடி, தலையை உயர்த்தினான்.

அதே நேரத்தில், தைலம்மையும் குனிந்த தலையை நிமிர்த்தினாள்.

பின்னல் கோலாட்டக் கயிறுகள் இரு தரப்புக்குமாக ஒன்றோடொன்று சந்தித்துப்பிரிந்து விளையாடுவது போல அவளது கோல விழிகளும் அவனது அழகிய கண்களும் ஓர் அரைக்கணம் சந்தித்து விலகிக் கொண்டன.

பிறகு, அவளும் தலையைத் தாழ்த்தினாள்.

அவனும் தன் சிரசைக் கீழ் வசத்தில் சாய்த்து விட்டான்.

இறங்கு முகத்தில் இருந்த கதிர்களைத் தழுவியபடி வீசியது வேப்ப மரக் காற்று.

குனிந்த தலை குனிந்தவாக்கிலேயே, “அம்மான்காரக எப்ப வருவாங்க ?” என்று கேட்டான் இளைஞன்.

“அவுக எப்ப வருவாங்கண்ணே தோணலீங்க...எங்கிட்டாலே பறிஞ்சாங்கண்ணும் மட்டுப்படலீங்களே!.” என்று மறுமொழி பகர்ந்தாள் வாலைக் குமரி. சேலைத் தலைப்பின் ஒரு பிசிறு அவளது பல் இடுக்கில் சிக்கியிருந்தது.
க.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/56&oldid=1386044" இலிருந்து மீள்விக்கப்பட்டது