பக்கம்:களத்துமேடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

களத்து மேடு

மகப் பொண்ணாக ஆகப்போறேனாக்கும்!” என்று ஆனந்தத் துள்ளலுடன் வார்த்தைகளைக் கொட்டி விட்டு; வந்த அடித்தடம் தெரியாமல் ஓடிவிட்டாள் பூங்காவனம்

தைலம்மை அப்படியே சிலையானாள்!

கதிர்க் கொத்து 6

ரத்தக் காணிக்கையா?....

னவுகள் வளர வளர, அதே துரித கதியில் – அதே பரிணாம வலுவில் – ஆசைகளும் வளரத் தொடங்குகின்றன.

இது மனத்தின் இயல்பு.

இதற்கு விலக்கல்லள் தைலம்மை.

ஆகவே, அவள் வளர கனவுகளும் ஆசைகளும் விதி விலக்காக அமையவும் இல்லை.

ஆனால், ‘விதி’ மாத்திரம் விலக்கு ஆனது.

இல்லையென்றால், அதிசயத் திருக்கூத்துக்கள் அவளை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்திருக்க முடியுமா?

இராப்பொழுது கழியக்கழிய அவளுக்குப் பயமும் கவலையும் மிஞ்சத் தொடங்கின. ‘நான் எதை நெனைப்பேன்? எதை நெனைக்காம இருப்பேன்? ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உள்ள சங்கதிதான்! அதுக்காக, அப்பன்காரவுகளோட படுத்தடியான தப்பு தண்டாப் போக்கையும் முருதாக் குணத்தையும் கமுக்கமான நடத்தையையும் பூசி மெழுகி ஊரு வாயை மூடிப்புட ஏலுமா? தங்களோட வயிறு காயிறத்தைப் பத்திக்கூட கிலேசப்படாம, எதிரி பட்டினி கிடக்கிறதிலே ஆடிக் குதிக்கிற இந்தப் பாழ்த்த ஊரிலே எப்பிடித்தான் எங் கனா கெலிப்புச் சொல்லப் போவுதோ? ஒண்ணுமே மட்டுப் படலை. அதுக்கொப்ப,இந்தச் சிலட்டூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/67&oldid=1386113" இலிருந்து மீள்விக்கப்பட்டது