பக்கம்:களத்துமேடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

களத்து மேடு

தொடங்கி விட்டது. பதட்டம் அங்கங்களிலே கொட்டு முழக்கியது. 'சிதம்பர அண்ணாச்சி, கொஞ்சம் பரிஞ்சு நம்ம ஆசாரி ஐயாவை கையோட அழைச்சிக்குணு வாங்களேன். சேதியைப் புட்டு வச்சு சொல்லிப்பிடுங்க! அப்பத்தான் வசமா மருந்து கொண்டார வாட்டப்படும்!’’ என்றாள்.

அந்த சிதம்பர அண்ணாச்சி சோற்றுக்காலை எடுத்து அடிப் பிரிப்பதற்குள் சேரிச்சாம்பான் கிழவன் "நானு போயி கையோட கொண்டாறேன், தாயி" என்று ஓடினான்.

மனிதாபிமானத்துக்குச் சாதி ஏது, மதம் ஏது'-ஆம், மனிதாபிமானத்துக்குத் தெய்வம் மட்டிலும்தான் உண்டு!

வங்குபற்றிய நாயொன்று ஊளையிட்டது.

கிழவி ஒருத்தி சுக்கான்கல்லை எடுத்து அதன்பேரில் வீசினாள்.

நாய் ஒடிவிட்டது.

வயிற்றில் நெருப்பைச் சுமந்தபடி களத்துமேட்டின் நாற்புறங்களையும் பார்வையால் சாடியவாறு நின்றாள். அவளுள் தெய்வத்துக்கு ஆடுகளம் அமைத்துக் கொண்டிருந்தாள்.

கண்மூடி கண் திறந்திருப்பாள்.

சோமசுந்தர வைத்தியர் வந்தார். "ஐயா, நீங்கதான் சாமி!’’ என்று அவரது கால்களில் சரண் புகுந்தாள் தைலி.

"எந்திரு தங்கச்சி. இப்பவே மனுசங்களுக்கு கண்ணு மண்ணு திசை புரியமாட்டேங்குது. நீ வேறே மனுசனை-- அல்பமான மனுசனை-சாமியாக்கிப்புடாதே! உன்னோட தகப்பனாரை பொழைக்கவைக்கிறதுக்கு பகவானை நம்பி, எனக்குப் படியிற வாகானம் வகைகளைச் செஞ்சு பார்க்கிறேன். அதுக்கு மேக்கொண்டு ஈசன்விட்ட வழி!" என்று சுருக்கமாக முடித்துவிட்டு, சேர்வையின் நாடியைப்பற்றிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/83&oldid=1386135" இலிருந்து மீள்விக்கப்பட்டது