பக்கம்:களத்துமேடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

79

புகட்டப்பட்ட மருந்து வெளிவாங்கித் திரும்பிவிட வில்லை. கொஞ்சம் நஞ்சம் வழிந்தாலும், உள்வசமாகச் சென்றுகொண்டு இருந்தது. நாடியை மீண்டும் பார்த்தார்.

வைத்தியரின் சோதனை பலமாகத்தான் இருந்தது.

ஆனால் தெய்வத்தின் சோதனை, யார் செய்த புண்ணியமோ, பலமாக அமைந்துவிடவில்லை.

சேர்வை முதன்முறையாக விழிகளை உருட்டி விழித்தார்.

"ஆத்தாடி!’’ என்று அழகிரி அம்பலக்காரர் தம்மை மறந்து ஆனந்தக் கூச்சல் போட்டார்.

"அப்பா! அப்பாரே!" என்று மகிழ்வின் பெருக்கில் கூவி, தந்தையின் பாதங்களைப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் தைலம்மை.

"ஆத்தா"’ என்று மகளை சன்னக் குரலெடுத்து,பாசத்தில் அதை குழைத்து கூப்பிட்டார் செங்காளியப்பன் சேர்வை. மகளின் கதுப்புக் கன்னங்களில் வழிந்த சுடு நீரை வழித்தார். "ஆத்தா தைலி!..இனிமே ஒன்னை அந்த சில்ட்டூர் மாப்புள்ளை கட்டிக்கிடறதுக்கு ஒரு தவசலும் தடையும் சொல்லமாட்டாங்க ஆத்தா! ஆமா, இனிமே நீ ராசாத்திக் கணக்குத்தான்! ஆத்தா அல்லாத்துக்கும் பாதை தொறந்து காட்டிபுட்டா, ஆமா, நான் பேசறது. என்னான்னு மட்டுப்படலையா? வந்து...வந்து..." என்று பேசிக்கொண்டிருந்தவர் இருந்திருந்தாற்போல விம்மி விம்மி அழுதார். அவர் அடித்துப்போட்ட பாவனையில் மறுதரம் உணர்ச்சியற்றும் போய்விட்டார் சேர்வை.

பச்சைத் தண்ணீர் தெளிக்கப்பட்டது சேர்வையின் முகத்தில்! "இனி எனக்கு-எம்புட்டு உசிருக்கு-யாதொரு பயமும் இல்லே!.ஆமா! ஓங்கண்ணாலந்தை முடிச்சுவைக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/86&oldid=1386147" இலிருந்து மீள்விக்கப்பட்டது