பக்கம்:களத்துமேடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

81

தைலம்மை ஏப்பம் பறித்தவளாக உள்வசமாகத் திரும்பினபோது, தன்னையே கண்காணித்துக்கொண்டிருந்த தன் தந்தையைக் கவனிக்கத் தவறவில்லை. "என்னா ஆத்தா, இந்தப் பனி கூதலிலே இம்மாந் தொலைவுக்குத் தண்ணி குடிக்கிறே? அப்பாலே மேலுக்குச் சரிக்கட்டி வருமாக்கும்?" என்று செல்லமாகக் கண்டித்தார்.

அவள் செல்லமாகச் சிரித்துக்கொண்டாள்.

நிலைகுப்புற விழுந்த பந்தயக் குதிரை வெட்கத்துக்கு ஆற்றமாட்டாமல் சிரிப்பது போல இருந்தது, செங்காளியப்பன் சேர்வை தலையை சிலுப்பிக்கொண்டு குந்தியவாறு மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு சிரித்த சிரிப்பு!

"ஆத்தா தைலி மூஞ்சியிலே இப்பக் காணுகிற இம்மாம் தெளிஞ்ச சிரிப்பை இதுக்கு முந்தின கடுத்தங்களிலே என்னாலே காணவே வாய்க்கலையே!...அததுக்கு ஒரு காரணம் காரியம் இருக்கத்தான் இருக்குது!’’ அவர் அத்துடன் பேச்சைத் துண்டித்தார். பேச்சு துண்டிக்கப்பட்டதே தவிர, சிந்தனை துண்டிக்கப்படவில்லை. வாய்ப் பேச்சாக அவள் பேசிய பாவனையிலிருந்து விலகி, அவரது உள்ளகம் என்னவெல்லாமோ எண்ணித் தொலைத்தது. 'எங்கதை எம் பொண்ணுக்கு தலைக் குடைச்சலைத் தந்துக்கிட்டு வந்ததாலேதான் இத்தனை நாளும் அது உள்ளுக்குள்ளவே மனசு குமைஞ்சு கிட்டிருந்திருக்க வேணும்!...இப்ப அல்லாம் தெளிவாயிடிச்சு. அது மனசொப்பி நேசிச்சு வந்த அந்த சிலட்டூரு மச்சான்காரரை அது இஷ்டபிரகாரமே கண்ணாலம் கட்டிக்கிடுறதுக்கு இனி இடையூறு எதுவும் இல்லேன்னு சொன்னடியும் அதுக்கு மூஞ்சி தெளிஞ்சு வந்திருச்சு; நானும் கண்ணாலே கண்டுகிட்டேனாக்கும்!... ஆமா, எல்லாம் மெய்தான்!...அவுக அவுக வாழ்க்கையிலெ அவுக அவுகளுக்கு ஒசந்த ஆசைகளும் கனாக்களும்தான்

க .மே-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/88&oldid=1386166" இலிருந்து மீள்விக்கப்பட்டது