பக்கம்:களத்துமேடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

களத்து மேடு


அவள் நீ!

அவளே நீர்!

அவள் பூவிதழ் விலக்கி, பொன் மலர் தூவினால், அங்கே கனவின் கொழுந்து சிரிக்குமே!.....

அவள் இன்முகம் ஏந்தி, எழில் நலம் காட்டினால், அங்கே அன்பின் மலர்ச்சி ஏடு விரியுமே!...

அவளுடைய வீரம் செறிந்த தமிழ்ச்சாதியின் மறக்குலப் பண்பாட்டிலே தொக்கி நின்ற போராட்டங்கள், புதிர்கள், பிரச்சனைகள், படிப்பினைகள், சொப்பனங்கள், இங்கிதங்கள், விதரணைகள், வினயங்கள் எத்தனை எத்தனையோ!....

ஆஹா, அவள் கனவுக் கிளி! அவள் எத்தனை எத்தனையோ இளவட்டங்களின் கனவாக, அவர்களுக்கு வாய்த்த கனவாக நின்று, அவளே கனவின் தர்மமாக-வாழ்வின் நியமமாக-விதியின் தலைவியாக-கற்பின் கனலியாக-பெண்மையின் சக்தியாக-சக்தியின் விதியாக நிலவுகின்ற நடப்புக் கதையை என்னென்பேன்!...

அந்த நடப்புக் கதையை நீங்களும் அறியத் துடிப்பு உண்டாகிறதல்லவா?- அப்படியென்றால் களத்துமேடு இடங்களை அழைக்கிறது. அமைதிபூத்த நம்பிக்கையுடன் அண்டிச்செல்லுங்கள்!...

புரட்சியும் புதுமையும் தோரணம் கட்டி உங்களை வரவேற்கும்!....

கதை கொத்து : 1

இறை மணம்

ந்தப் பெரிய குதிரில் விதை நெல் அழகுடன் கோடை கட்டி வைக்கப்பட்டிருந்தது. - ராஜ கோபுரத்துக்கு அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/9&oldid=1386074" இலிருந்து மீள்விக்கப்பட்டது