பக்கம்:களத்துமேடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

85

போயிட்டாங்களே! அவுகளுக்கும் சேர்த்துத் தான்உலையிலே அரிசி போட்டிருக்கேன்! ஆம்பளையைக் காணலையே!...”

பிரிவின் துயரமும், ஏக்கத்தின் பளுவும் அவளுடைய கண்டத்தை அடைத்தன.

சேர்வைக்காரர் திண்டில் தலையை வாகாகப்பொருத்திக் கொண்டு சுவருடன் சாய்ந்து கிடந்தார். "வந்திடுவாங்க மாப்பிள்ளை! எங்கிட்டானும் காலாற போயிருப்பாக!" என்று ஆறுதல் படுத்தினார். பிறகு, "ஆத்தா...!" வந்து ஒன் சித்தப்பன்காரனோ, அவன் பொண்ணு பூங்காவனமோ இங்கிட்டு மூஞ்சியைக் காட்டலையே?" என்று பதட்டம் மாறாமல் கேட்டார்.

அவள் "ஊக்கும்!" என்று தலையை உலுக்கினாள்.

வாசலில் உலுக்கிக்கொண்டு வந்து நின்றிருந்த காளைகளின் மணியோசை கேட்டது.

தைலம்மை வெளியே சென்றாள். வயற்காட்டிலிருந்து வந்திருந்தது வண்டி.

விஷயத்தை அறிந்தார் செங்காளியப்பன். "பெருங்கார முண்டருக்கு நேந்துக்கிட்டு உண்டியல் போட்டது. வீணில்லேம்மா!......" என்று தொடங்கினார். "அறுபதாம் பட்டம் மகசூல் தொடங்குறதுக்குள்ள ஒங்கண்ணாலம் காட்சியை முடிச்சுப்புடலாம்னு பார்க்றேன் ஆத்தா! நாளைக்கே மாப்பிள்ளையை வச்சிக்கிட்டு பரிசம்போட்டு பாக்கு வெத்தலை மாத்திக்கிடறதுக்கும் நாள் நட்சத்திரம் எழுதிப்புட வேணும்!’ என்றார்.

தன் திருமண நிமித்தம் தன் தந்தை தெய்வத்திடம் வேண்டுதலை செய்துகொண்ட விவரத்தையும் அவரது பேச்சு கோடி காட்டிற்று. அவளுக்கு அப்பேச்சு மிகுந்த அமைதியைக் கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/92&oldid=1386214" இலிருந்து மீள்விக்கப்பட்டது