பக்கம்:களத்துமேடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

களத்து மேடு

தீங்களே! சரி, சரி! அதெல்லாம் எனக்கு எதுக்கு? நீங்க வாங்க சாப்பிட!” என்றாள்.

என்ன ஆச்சரியம்!

சற்றுமுன் கீரியும் பாம்புமாகப் பொரிந்து கொட்டிக் கொண்டிருந்தார்களே சரவணனும் சிங்காரமும்? அவர்கள் இருவரும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அப்பொழுது எப்படித் தைலம்மையைப் பின்தொடர முடிந்தது?...

கதிர்க் கொத்து 9

விளக்கிலே ஈ!

ச்சில் பணிக்கத்தைக் கைகளைத் தடவியபடி எடுத்த செங்காளியப்பன் சேர்வை, ஒருகணம் இருட்டிலே தடமாடியவராக நடுநடுங்கி, மறுகணம் விளக்கின் தடத்தைக் கண்டு கொண்டவர் போன்று நிலை தெளிந்து, அந்த அமைதியுடன் வாய் எச்சிலைத் துப்பினார். கணநேரப்பொழுதுக்குள்ளாகத் தமது சித்தத்தில் ஏற்பட்டிருந்த மனத்தடுமாற்றம் தம்மை எப்படி எப்படியெல்லாம் நிலை தடுமாறச்செய்து விட்டது என்ற உண்மை நடப்பையும் அவரால் உணர்ந்து கொள்ளமுடிந்தது. வேதனையும் பெருமூச்சும் அவரை வாட்டி விட்டன. காலத்தின் கழிந்த தினங்கள் இப்போது அவரது மன அரங்கத்தில் நிழல் விரித்தன. அந்நிழலில் ஒதுங்கிய வண்ணம் கண்களை மூடிக்கொண்டார். அக்கரைச் சீமை அவருள் திரும்பியது. சுகபோகத்துடன் வாழ்ந்த அந்நாட்களில் அவர் செய்த லீலைகளின் அவதாரங்கள் சிலவற்றை எண்ணமிட்டார். அழகுப் பெண்கள் சிலரின் அழகு முகங்கள் தோன்றி மறைந்தன. தாய் மண்ணும் அவருக்கு நினைவின் விழிப்பாயிற்று. இந்த மண்ணிலும் அவர் ஆடிய ஆட்டம் கொஞ்சமா, நஞ்சமா? கண்களைத் திறந்தார். இமைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/95&oldid=1386886" இலிருந்து மீள்விக்கப்பட்டது