பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி108

சமயத்தைப் பரப்பியதாகும்.

வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்கம் கி.பி. 470ல் நிறுவப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் ‘பழங்கால இந்திய வரலாற்றுக்குச் சைன மூலங்கள்’ என்றும் நூலை எழுதிய ஜியோதி பிரசாத் ஜெயின், வச்சிரநந்தி திராவிட சங்கத்தை அமைத்தது கி.பி.604-ம் ஆண்டு என்று கூறுகிறார்.[1] இவர் கூறுவது தவறு. விக்கிரம ஆண்டு 526 என்பதை சாலிவாகன ஆண்டு 526 என்று கணக்கிடுவதால் இவர் தவறுபடுகிறார். விக்கிரம ஆண்டு 526 என்பது கி.பி.470 அல்லது 469 ஆகும். சாலிவாகன சகம் 526 என்று கணக்கிட்டால் அது கி.பி. 604 ஆகிறது. வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 526-ல் (கி.பி. 170] மதுரையில் தமிழச் சங்கத்தை நிறுவினார் என்பதே சரியாகும். களப்பிரர் ஆட்சி ஏறத்தாழ கி.பி.575-ல் முடிந்து விட்டது. களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு கி.பி. 604-ல் வச்சிரநந்தி மதுரையில் தமிழச் சங்கம் நிறுவியிருக்க முடியாது. எனவே வச்சிர நந்தி கி.பி.470- ல் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பதே சரி எனத் தோன்றுகிறது.

முற்காலத்தில் பாண்டியர் மதுரையில் மொழிவளர்ச்சிக்காக அமைத்த சங்கம் வேறு, பிற்காலத்தில் சைன சமய வளர்ச்சிக்காக வச்சிரநந்தி ஆசாரியர் ஏற்படுத்திய சங்கம் வேறு. வெவ்வேறான இரண்டு சங்கங்களையும் ஒன்று எனக் கருதுவது தவறு. திரு.பி.தி. சீனிவாச அய்யங்கார் ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலில் இது பற்றித் தெளிவாகவும் சரியாகவும் எழுதியுள்ளார். இது (வச்சிர நந்தியின் திரமிள சங்கம்) நாம் அறிந்துள்ள தமிழ்ச்சங்கம் (பாண்டியரின் தமிழ்ச்சங்கம்) அன்று, சாதாரண மக்களுக்கு சைன மதத்தைப் போதிப்பதற்காகத் தமிழ்நாட்டில் சைன சமயத்தாரால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார்.[2]

திரு.எம்.எஸ். இராமசாமி அய்யங்கார் இது சம்பந்தமாக வரலாற்றுக்கு மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார். களப்பிரர் ஆட்சிக்கு முன்பே, பாண்டியர் ஆட்சிக் காலத்திலேயே வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கத்தை அமைத்தார் என்று இவர் கூறுகிறார். இவர் கூறுவது வருமாறு:

"திகம்பர தர்சனம் என்னும் சைன சமய நூல் ஒரு பெரிய செய்தியைக் கூறுகிறது. விக்கிரம ஆண்டு 526-ல் (கி.பி.470) பூச்சிய பாதரின் மாணாக்கரான வச்சிரநந்தி என்பவர் தென் மதுரையிலே ஒரு திராவிட சங்கத்தை நிறுவினார் என்று அந்த நூல் கூறுகிறது. சைன சமயத்தைப் பரப்புவதற்காகத் தெற்கே வந்த திகம்பர சைனரின் கூட்டந்தான் அந்தச் சங்கம் என்று அந்த நூலிலிருந்து அறிகிறோம். பாண்டிய நாட்டை அரசாண்ட அரசர்களின் ஆதரவு இல்லாமற் போனால், சைன சமயத்தார் கொடுந்தண்டனை கொடுக்கப்பட்ட அந்த நாட்களிலே, ஒரு சங்கத்தை நிறுவியிருக்க மாட்டார்கள். இந்தச் சங்கம் அமைக்கப்பட்டதில் (பாண்டிய) அரசருடைய ஆதரவு சைனருக்கு இருந்தது என்பதை யறிகிறோம். இந்த ஆதரவு பிராமணியத்தின் தலைவர்களுக்குப்


  1. 1. Jyoti Prasid Jain, Thenia Sources of the History of Ancient India (100 B.C. 900A.D.), 19:54. pp. 160, 167.
  2. 2. P.T.Srinivasa tyangar, History of the Tamils, 1923. p.247,