பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 118


மேலும் உரை கூறுகிறது:

“இட்ட பிற்றை ஞான்று, தேவர் குலம் வழிபடுவான் தேவர் கோட்டத்தை சாங்குந் துடைத்து, நீர் தெளித்துப், பூவிட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென்றும் அலகிடாதாள் அன்று தெய்வத் தவக் குறிப்பினான் அலகிடுவனென்று உள்ளங்குளிர அலகிட்டாள். இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போத்தன. போதரக் கொண்டு போந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத் தாயிற்றோர் பொருள திகாரமாய்க் காட்டிற்று. காட்டப் பார்ப்பான் சித்திப்பான்: அரசன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றானென்பது பட்டுச் செல்லா தின்ற துணர்ந்து நம்பெருமான் அருளிச் செய்தாலாகும் என்று தன் அகம்புகாதே கோயிற் றலைக்கடைச் சென்று நின்று கடைக் காப்பார்க்குணர்த்தக் கடைக்காப்பார் அரசர்க்குணர்த்த, அரசன் புகுதருகவென்று பார்ப்பானைக் கூவச் சென்று புக்குக் காட்டக் கொண்டு நோக்கி, இது பொருளதிகாரம்! நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தாளாகற்பாலது என்று, அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து நம்பெருமான் தமது இடுக்கண் கண்டு அருவிச்செய்த பொருளதிகாரம். இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின் என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப்பலகை ஏறியிருந்தாராய்வுழி, எல்லாரும் தாந்தாம் உரைத்த உரையே நன்றென்று சில நாளெல்லாஞ் சென்றன. செல்ல நாம் இங்ஙனம் எத்துணையுரைப்பினும் ஒருதலைப்படாது. நாம் அரசலுழைச் சென்று நமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டும் என்று கொண்டு போந்து, அவனாற் பொருளெனப் பட்டது பொருளாய் அன்றெனப்பட்டது அன்றா யொழியக் காண்டுமென, எல்லாரும் ஒருப்பட்டு அரசலுழைச் சென்றார். செல்ல அரசனும் எதிர் எழுந்து சென்று, ‘என்னை? நூற்குப் பொருள் கண்டீரோ?’ என, ‘அது காணுமாறு மெக்கோர் காரணிகளைத் தரல் வேண்டும்’ எனப், 'போமின். துமக்கோர் காரணிகளை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின் மராயிற்று. நமக்கு நிகராவார் ஒருவர் இம்மையினின்றே' என்று அரசன் சொல்லப் போந்து பின்னையும் சுன்மாப்பலகை ஏறியிருந்து அரசனும் இது சொல்லினான் ‘யாங் காரணிகளைப் பெறுமாறு என்னைகொ’ வென்று சிந்தித் திருப்புழிச், சூத்திரஞ் செய்தான் ஆலவாயி லவிர்சடைக் கடவுளன்றே! அவளையே காரணிகளை யுந் தரல் வேண்டுமென்று சென்று வரங்கிடத்தும்' என்று சென்று வரங்கிடப்ப, இடையாமத்து, ‘இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான், பைங்கண்ணன் புன்மயிரான் ஜயாட்டைப் பிராயத்தான் ஒரு மூங்கைப் பிள்ளை உவன்; அவனை அன்னனென் றிகழாது கொண்டு போத்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம் மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்ட விடத்து; மெய்யல்லா உரைகேட்டவிடத்து வாளாஇருக்கும். அவன் குமார தெய்வம், அங்கோர் சாபத்தினாற் தோன்றினான்' என முக்காலிசைத்த குரல் எல்லார்க்கும் உடன்