பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி142

தமிழகத்தின் பகுதி, எனவே கள்வர் தமிழர், களப்பிரரோ கன்னடர்.

3. களப்பிரர் சமயம்: களப்பிரர் காலத்தில் சமணமும் பவுத்தமும் மென்மேலும் சிறப்புப் பெற்று பெருகி வளர்ந்தன. சைவ, வைதீக சமயங்கள் சிறப்படையாமல் மங்கியிருந்தன. எனினும், களப்பிரர் சமணச் சார்புடையவர் என்று வரலாற்றாசிரியர் எழுதியுள்ளது தவறான கருத்து. களப்பிர அரசர் அச்சுத பரம்பரையினர் என்று கருதப்படுகிறபடியால் அவர்கள் வைணவ சமயத்தார் என்று கருதுவதே சரி.

4. சங்க கால இறுதியும் களப்பிரர் காலத்தோற்றமும் பற்றி: போர் செய்வதையே வழக்கமாகவும், குறிக்கோளாகவும், பெருமையாகவும் கொண்ட சங்க கால வீரயுகத்தின் இறுதியில் களப்பிரர் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்போர்க்களச் சூழ்நிலை (கி.பி. 2ம்நூ) தமிழ்நாட்டையும் தமிழ் அரசர்களையும் பலவீனப்படுத்தி இருந்தது. அந்நிய நாட்டைத் தடுத்து திறுத்த ஆற்றல் மிக்க பேரரசர் இல்லாத நிலை களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படக் காரணமாக இருந்தது.

5. களப்பிரர் வீழ்ச்சி பற்றி: களப்பிரருக்குப் பெரும்பான்மை மதமான ஜைன மதத்தின் ஆதரவு இருந்த போதிலும், நாட்டில் அரசியல் ஆதரவு இல்லையென்றே தோன்றுகிறது." சோழ பாண்டியர், தொண்டை மண்டலப் பல்லவர் சமயம் பார்த்திருந்தனர். கி.பி. 6ம்நூ. இறுதியில் பாண்டியர் களப்பிரரை வென்று தமது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் (அழுத்தம் நமது).

6. வீழ்ச்சிக்குப் பின் களப்பிரர்: களப்பிரர்தம் இராச்சியத்தைச் சேர, பல்லவ, பாண்டியர்களுக்கு இழந்துவிட்ட பிறகு அவர்கள் பேரரசர் நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து சிற்றரசர் நிலையை அடைத்தனர். களப்பிரரும் முத்தரையரும் ஒருவரே. பண்டாரத்தார் சொல்வது போல வேறு வேறல்ல. களப்பிரரின் சந்ததியாரே களப்பாளர் என்பதும் தளவாய்புரச் செப்பேட்டிற்குப் பின் தெரிந்துவிட்டது. பண்டாரத்தாரும் ஔவையும் சொல்வது போல வேறுவேறல்ல.

7. பார்ப்பனர்களுக்கான தானங்களை இறக்கியமை குறித்து: "களப்பிரர் வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால் அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது." களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். பார்ப்பனருக்குத் தானம் கொடுத்து அவர் ஆதரித்ததை' அகலிடமும் அமருலகும்' எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது. (அழுத்தம் நமது)

8. களப்பிரர் காலம் தமிழ் மொழியும் பண்பாடும் அழிக்கப்பட்ட இருண்ட காலம் என்பது பற்றி: இதனைக் கடுமையாக மறுக்கிறார் வேங்கடசாமி. தமிழும் இலக்கியமும் பண்பாடும் பெரிதும் வளர்ச்சியுற்ற காலமாக அவர் இதனைக் கருதுகிறார். இக்காலகட்டத்தில்தான் தமிழ் எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக வளர்ச்சியுற்றது. நால்வகைப் பாக்களோடு (ஆசிரியம், வெண்பா , கலி, வஞ்சி) முடங்காமல் தாழிசை, துறை, விருத்தம் எனப்புதிய பா வகைகள் தமிழில் கிளைத்ததும் இக்காலத்தில் தான். அகம்,