பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

கன்னடத்தில் ஹொய்சளர்களைப் போல வெகுசில சந்தர்ப்பங்களில் மட்டுமே விவசாயச் சமூகத்தின் மீதான இந்த ஆதிக்கம் வெற்றி பெற்றது. வெற்றி பெறும் போது அது இரு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது என்கிறார் ஸ்டெய்ன் அவை:

(1) இந்து மதம், பார்ப்பன நிறுவனங்கள் ஆகியவற்றை வணங்கி ஏற்பது, ஆதரிப்பது.

(2) விவசாயச் சமூகங்களின் ஆதிக்க சக்திகளாக விளங்கிய உள்ளூர்த் தலைமைகளை (locality chiefs) அங்கீகரித்து ஏற்பது.

(அதே நூல் பக். 77)

களப்பிரர் காலத்தில் விவசாயம் சாராத மேட்டு நில மக்களின் மேலாண்மை முயற்சி தோற்றதற்குக் காரணம் இந்த இரு அம்சங்களையும் அவர்கள் ஏற்கத் தவறியதுதான் என்கிறார் ஸ்டெய்ன். பார்ப்பன நிறுவனங்களையும், இந்துப் பண்பாட்டையும், பார்ப்பன வேளாள உள்ளூர் ஆதிக்க சக்திகளையும் அவர்கள் ஏற்கவும், வணங்கவும் மறுத்ததே காரணம் என்கிற ஸ்டெய்னின் கூற்று. வேங்கடசாமி குறிப்பிடும் அரசியலாதரவு இல்லாமற் போனதற்கான காரணத்தைத் தொட்டுக் காட்டி விடுகிறது.

ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இராணுவ மேலாதிக்கத்திலும் கலாச்சார மேலாண்மையிலும் தன்னை உறுதி செய்து கொண்ட விவசாயச் சமூகம், விவசாயம் சாராத பாக்களையும் அவர்தம் வளங்களையும் சில நேரங்களில் மெதுவாகவும் சில நேரங்களில் வேகமாகவும் அபகரித்து வளர்ந்தது என முடிக்கிறார் ஸ்டெய்ன். விவசாயம் சாராத இப் போர்ச் சமூகத்தினர் சமண பவுத்த மதங்களால் ஈர்க்கப்பட்ட காரணம் என்னவெனில் இந்துப் பிரிவினருடன் பிணைத்திருந்த சமகால விவசாயப் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொள்ளாமலேயே ஆரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் இந்த (அவைதீகச்) சமயங்கள் அவர்களுக்கு வழங்கின என்கிற அவரது கருத்தும் மிக முக்கியமானது.

5

மயிலை சீனி. வேங்கடசாமி, கார்த்திகேசு சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துக் கொள்வதற்கு முன்பாக, களப்பிரர் காலம் குறித்து அறிந்து கொள்வதற்கான முக்கிய ஆவணங்களில் ஒன்றாய்த் திகழ்வதும், வேங்கடசாமியவர்களால் சற்றே ஒதுக்கி வைக்கப்பட்டதுமான வேள்விக் குடிச் சாசனத்தைச் சிறிது வாசிக்க முயல்வோம். 'செந்தமிழ்' 20ம் தொகுதி; Epigraphica India Vol XVII,1923-291/1309; 'பாண்டியர் செப்பேடுகள் பத்து', கழகம், 1967 ஆகியவற்றிலும் பாண்டியர் மற்றும் களப்பிரர் வரலாறு கூறும் வேறு சில நூற்களிலும் இதனை முழுமையாகக் காண இயலும்.

தனது களப்பிரர் குறித்த நூலில் (முன் குறிப்பிட்டது) பின்னிணைப்பாகச் சாசனத்தின் தமிழ்ப்பகுதியை முழுமையாக வெளியிட்டு, அதில் கண்ட சுமார் பதினேழு சொல்லாட்சிகட்கு விரிவாக விளக்கமெழுதுவார்