பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மயிலை சீனி வேங்கடசாமி

இரணோட்டையாண்ட சோழர்களைப் பற்றி மட்டும் இங்கு கூறுவோம்.

இரேணாட்டை யரசாண்ட சோழர் அங்கு நிலைத்து நெடுங்காலம் அரசாண்டபோதிலும் அவர்கள் முழுச்சுதந்தரராக இருக்க வில்லை. தங்களைவிடப் பேரரசரின் துணையை நாடி வாழ வேண்டியவராக இருந்தனர். முதலில் அவர்கள் தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ மன்னர்களுக்கு அடங்கியிருந்தனர். அவர்கள் தங்களுக்கு, அக்காலத்துப் பல்லவ மன்னர்கள் பெயரைச் சூட்டிக் கொண்டதிலிருந்து இதனை அறிகிறோம். பிறகு, மேலைச் சாளுக்கியர் வலிமை பெற்று ஓங்கினபோது இவர்கள் சாளுக்கிய மன்னரைச் சார்ந்து வாழ்ந்தனர்.

களப்பிரரின் ஆட்சிக்காலத்தில் இரேணாட்டையாண்ட தெலுங்குச் சோழர்களின் பெயரையும் அவர்கள் சூட்டிக் கொண்டிருந்த பல்லவ அரசர் பெயர்களையும் கீழே தருகிறோம். (பக்கம் 29) அவர்கள் ஆண்ட காலத்தையும் உத்தேசமாகத் தருகிறோம்.

இந்தச் சோழருடைய காலங்களைத் திரு.எம்.இராமராவ் அவர்களின் 'ஆந்திர தேசத்தின் பழைய வரலாற்று ஆய்வுகள்' என்னும் நூலிலிருந்து (பக்கம் 148-149) எடுத்துள்ளோம்.[1]

மற்ற இரேணாட்டுச் சோழர்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. இங்குக் கூறப்பட்ட முதல் ஆறு அரசர்கள் பல்லவ அரசர்களைச் சார்ந்து இருத்ததை அறிகிறோம். கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் கடைசியில் இருந்த ஒரு சோழன் இரேணாட்டில் சோழ இராச்சியத்தை நிறுவினான். இவன், முதலாம் தந்திவர்மன் என்னும் பல்லவனுடைய சமகாலத்தில் இருந்தவன். இவன் தன்னுடைய மகனுக்குப் பல்லவ நந்திவர்மனுடைய பெயரைச் சூட்டினான். நந்திவர்ம சோழன், சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசனுடைய சமகாலத்தில் இருந்தவன். இவள் தன்னுடைய மூத்த மகனுக்குச் சிம்மவிஷ்னுப் பல்லவனுடைய பெயரைச் சூட்டினான். தந்திவர்ம சோழனுடைய முதலாம் இரண்டாம் மூன்றாம் மகன்களான சிம்ம விஷ்ணுவும் சுத்த சனத்தலும் தனஞ்சயனும் பல்லவ சிம்மவிஷ்ணு காலத்தில் இருந்தவர்கள் என்பதை அறிகிறோம். சோழன் தனஞ்சயவர்மனின் ஆட்சிக்காலத்தில் பல்லவ சிம்மவிஷ்ணு, காவிரி பாய்கிற சோழ நாட்டையரசாண்ட களப்பிரனோடு போர் செய்து வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி அதனைத் தன்னுடைய பல்லவ இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். இந்தப் பல்லவ- களப்பிரப் போரில் இரேணாட்டுத் தனஞ்சயவர்மன் சிம்மவிஷ்ணுப் பல்லவனுக்கு உதவியாக இருந்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வேளை இந்தப் போரில் தனஞ்சயவர்மன் போர்க்களத்தில் இறந்திருக்கக் கூடுமோ என்றும் ஐயத் தோன்றுகிறது. இரேணாட்டுச் சோழன் தனஞ்சயவர்மன் தன்னுடைய மகனுக்கு மகேந்திர விக்ரமன் என்று, முதலாம் மகேந்திர விக்கிரமவர்மனின் பெயரைச் சூட்டினான்.

இரேணாட்டுச் சோழன் மகேந்திர விக்கிரமன் ஆட்சிக் காலத்தில் மேலைச் சாளுக்கிய அரசனான புலிகேசி (இரண்டாம் புலிகேசி)


  1. Studies in the Early History of Ardhradlesa, M.Rama Rao pp 148-149